சனி, 27 ஜூலை, 2019

டாக்டர்களை தாக்கினால் பத்து ஆண்டுகள் சிறை

தினமலர் :திருச்சி: திருச்சி மத்திய சிறையில் தன்னை தாக்கியதாக சமூக ஆர்வலர் முகிலன் அளித்த புகாரின் பேரில் நேற்று திருச்சி நீதிமன்றத்தில் அவரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடந்தது.தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கடந்த ஒரு மாதத்துக்கு முன் மாயமானார். பின் கண்டுபிடிக்கப்பட்ட அவர் குளித்தலையில் பெண் கொடுத்த பாலியல் பலாத்கார புகாரின் பேரில் குளித்தலை அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பின் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நீதிபதியின் உத்தரவுப்படி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின் கடந்த 22ம் தேதி கரூர் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு சென்ற முகிலன் சிறைத்துறை அதிகாரிகள் தன்னை தாக்கியதாக நீதிபதியிடம் கடிதம் மூலம் புகார் அளித்தார். அந்த கடிதம் குறித்து திருச்சி நீதிமன்றத்திலேயே விசாரிக்க கரூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.அதன்பேரில் நேற்று மதியம் முகிலன் திருச்சி ஜே.எம். 2 மாஜிஸ்திரேட் திரிவேணி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் மாஜிஸ்திரேட் 2 மணி நேரம் புகார் குறித்து தனியே விசாரித்தார். பின் சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பின் முகிலன் மீண்டும் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். புகார் மீது விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் திரிவேணி தொடர் விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பார் என்று தெரிகிறது

கருத்துகள் இல்லை: