செவ்வாய், 23 ஜூலை, 2019

ஆந்திரா .. தனியார் நிறுவனங்களில் மாநில மக்களுக்கு 75 வீத இட ஒதுக்கீடு .. ஜெகன் மோகன் அதிரடி!

தினமணி : விஜயவாடா: இந்தியாவிலேயே முதல் முறையாக, தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு முறையை  ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிமுகப்படுத்தியுள்ளார். ஆந்திராவில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும், அது அரசின் நிதியுதவியோடு செயல்படுகிறதோ இல்லையோ, அனைத்திலும், ஆந்திர
மக்களுக்கு 75% இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா ஆந்திர மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறை வேற்றப்பட்டது. இந்தியாவிலேயே முதல் முறை சினிமா பாணியில் அதிரடி அறிவிப்பினை வெளியிட்ட ஜெகன் மோகன் dinamani முகப்பு இந்தியா இந்தியாவிலேயே முதல் முறை சினிமா பாணியில் அதிரடி அறிவிப்பினை வெளியிட்ட ஜெகன் மோகன் 0 share via email விஜயவாடா இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு முறையை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிமுகப்படுத்தியுள்ளார்

ஆந்திராவில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் அது அரசின் நிதியுதவியோடு செயல்படுகிறதோ இல்லையோ அனைத்திலும் ஆந்திர மக்களுக்கு 75 இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா ஆந்திர மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது உள்ளூர் மக்களுக்கு தனியார் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பல மாநிலங்களிலும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டாலும் ஆந்திராவில் இது சட்டமாக இயற்றப்பட்டுள்ளது ஆந்திர மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய சட்ட திருத்தத்தின் மூலம் ஒரு தனியார் நிறுவனத்தில் உருவாகும் ஒரு காலிப் பணியிடத்துக்கு தகுதியுள்ள ஆந்திராவைச் சேர்ந்தவரைத்தான் பணியமர்த்த வேண்டும் ஒருவேளை அந்த தகுதியுடன் பணியாட்கள் கிடைக்கவில்லை என்றால் அரசின் உதவியோடு தொழிற்பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி அளித்து பிறகு அவர்களை பணியமர்த்திக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது இதன் மூலம் தகுந்த திறன் வாய்ந்த நபர்கள் இல்லை என்பதால் வெளி மாநில ஆட்களை பணியமர்த்திக் கொண்டதாக தனியார் நிறுவனங்கள் சாக்குப் போக்கு சொல்லி தப்பிக்க முடியாத வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது இந்தியாவிலேயே முதல் முறையாக சொந்த மாநில மக்களுக்கு தனியார் நிறுவன வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்து சட்ட திருத்தம் செய்திருக்கும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிகின்றன "> உள்ளூர் மக்களுக்கு தனியார் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பல மாநிலங்களிலும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டாலும் ஆந்திராவில் இது சட்டமாக இயற்றப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய சட்ட திருத்தத்தின் மூலம், ஒரு தனியார் நிறுவனத்தில் உருவாகும் ஒரு காலிப் பணியிடத்துக்கு தகுதியுள்ள ஆந்திராவைச் சேர்ந்தவரைத்தான் பணியமர்த்த வேண்டும். ஒருவேளை, அந்த தகுதியுடன் பணியாட்கள் கிடைக்கவில்லை என்றால், அரசின் உதவியோடு, தொழிற்பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி அளித்து, பிறகு அவர்களை பணியமர்த்திக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், தகுந்த திறன் வாய்ந்த நபர்கள் இல்லை என்பதால் வெளி மாநில ஆட்களை பணியமர்த்திக் கொண்டதாக தனியார் நிறுவனங்கள் சாக்குப் போக்கு சொல்லி தப்பிக்க முடியாத வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக சொந்த மாநில மக்களுக்கு தனியார் நிறுவன வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்து சட்ட திருத்தம் செய்திருக்கும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிகின்றன

கருத்துகள் இல்லை: