புதன், 24 ஜூலை, 2019

இலங்கைக்கு இந்தியா உட்பட 46 நாடுகளுக்கு விமான நிலையத்தில் விசா . நடைமுறை மீண்டும்

வீரகேசரி :ாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில்
வைத்து விசா வழங்கும் முறையை எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து மீண்டும் அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டிருந்த இந்த நடைமுறை, கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அடுத்து, இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இது குறித்த அமைச்சரவைப் பத்திரத்தினை, சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க சமர்ப்பித்திருந்தார். இந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், டென்மார்க், சுவீடன், நோர்வே, பின்லாந்து, ஐஸ்லாந்து, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்து விசா வழங்கப்படவுள்ளது.

 இதேவேளை, தாய்லாந்து, பிரித்தானியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, சுவிற்சர்லாந்து, கம்போடியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆகியவற்றின் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்து விசா வழங்கப்படும் முறை, ஏற்கனவே, நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: