திங்கள், 17 ஜூன், 2019

ராஜபாளையம் - செங்கோட்டை 4 வழிச்சாலைக்கு எதிர்ப்பு: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

வெப்துனியா :விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வரையிலான 4 வழிச்சாலை அமைக்க அண்மையில் மத்திய அரசு திட்டமிட்டு அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியையும் தொடங்கியது இந்த சாலை ராஜபாளையம் சத்திரப்பட்டியில் தொடங்கி மீனாட்சிபுரம், இனாம் கோவில்பட்டி, விஸ்வநாதப்பேரி, சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதிகள் வழியாக குற்றாலம், செங்கோட்டை செல்லவுள்ளது.
ஆனால் இந்த சாலை அமைக்கப்படவுள்ள பெரும்பாலான பகுதிகளில் விவசாய நிலம் உள்ளது. இதனால் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் ராஜபாளையம் - செங்கோட்டை 4 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு ஒன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் தகவல் பெற்று தெரிவிக்க மத்திய அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது

கருத்துகள் இல்லை: