புதன், 29 மே, 2019

எல்லை பாதுகாப்பு படையில் ஓபிசி எஸ்சி எஸ்டி இட ஒதுக்கீடு முழுவதும் ரத்து

முருகன் : இதோ பார்ப்பனர்கள் அல்லாதவர்களுக்கு பதவிக்கு வருவதற்கு
முன்னாலேயே முதல் ஆப்பை சொருகியிருக்கிறது பிஜேபியின் மோடி அரசு.
எல்லை பாதுகாப்பு படையில் ஓபிசி எஸ்சி எஸ்டி இவர்களுக்கான இட ஒதுக்கீட்டை முழுவதும் ரத்து செய்துவிட்டு, ஏற்கனவே முன்னேறியிருக்கிற சமூகங்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கி இருக்கிறது. எப்படியும் இந்த இடங்களை பார்ப்பனர்கள் தான் பெறப்போகிறார்கள்.
பார்ப்பனரல்லாத இட ஒதுக்கீடு என்றால் என்னவென்றே தெரியாமல் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசும் மக்கள் ஒன்றை இப்போது தெளிவாக புரிந்து கொள்ளலாம். அதாவது மோடி, 10 சதவீத இட ஒதுக்கீடு உயர்சாதியினருக்கு ஒதுக்குவதற்கு முன்னால் வரைக்கும் இட ஒதுக்கீடு என்பது தவறானது என்று பேசி வந்த பார்ப்பனர்கள் இப்போது யாரும் இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்வதில்லை. ஆனால் காலம் காலமாக உரிமைகள் மறுக்கப்பட்டு ஏதோ கடந்த 60 ஆண்டுகளில் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு நாம் பெற்ற இட ஒதுக்கீட்டை பார்ப்பனரல்லாத மக்களே இப்போது வேண்டாம் என்று தன் வாயாலேயே சொல்கிறார்கள். இதுதான் பார்ப்பனீயம்.

இந்த பித்தலாட்டத்தை பார்ப்பனரல்லாத மக்கள் தெரிந்து கோபம் அடையாமல் இருக்கத்தான் நாமெல்லாம் இந்து என்கிற மாய்மாலம் திணிக்கப்படுகிறது.அனைவரும் இந்துக்கள் என்றால் ஏன் பார்ப்பனர்களுக்கு மட்டும் தனியாக சட்டமும் இட ஒதுக்கீடும் கொடுக்கிறார்கள் என்கிற கேள்வியை பார்ப்பனரல்லாத மக்கள் கேட்காத வரை மகுடிக்கு மயங்கிய பாம்பாக மயக்கத்திலேயே இருக்கவேண்டியது தான். கடைசியில் உங்கள் கோமணமும் களவாடப்படும் அப்போது மறைக்க ஒன்றுமில்லாமல் மானமிழந்து நிற்க வேண்டியது தான்.

கருத்துகள் இல்லை: