வியாழன், 30 மே, 2019

அதிமுகவிடம் இருந்து பறித்த கப்பம்தான் பாஜகவின் வெற்றிக்கு வழிகோலியது... பல ஆயிரம் கோடிகள்...

Karthikeyan Fastura : Nash Theoryஐ பற்றி படிக்கும் போது அதை அப்படியே இப்போ
நடந்த தேர்தலில் கொஞ்சம் அப்ளை பண்ணிப்பார்த்த போது சில விஷயங்கள் தோன்றியது. இது எதற்கும் துல்லியமான ஆதாரம் இல்லை. இது ஒரு தியரி மட்டுமே
பிஜேபி இந்த மாபெரும் வெற்றி பெற்றதற்கு காரணம் தமிழ்நாடு தான். குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் மறைவு தான் காரணம். அவரின் உடல்நல குறைவிற்கு பிறகு அந்த இடத்தில் ஒரு வெற்றிடம் தோன்ற அதை பயன்படுத்தி தமிழ்நாடு என்னும் தங்கச்சுரங்கத்தை ஆட்டையப் போட பார்த்திருக்கிறது காவி அரசு.
இவர்களது விதிகளுக்கு ஒத்துவராத மன்னார்குடி கும்பலை ஓரம் தள்ளி அவர்களால் நியமிக்கப்பட்ட எடப்பாடியை கைக்குள் போட்டுக்கொண்டது. ஏற்கனவே பிளவை ஏற்படுத்தியிருந்த ஒபிஎஸ்சையும் சரிகட்டி இதற்குள் கொண்டுவந்தார்கள். இதற்காக தமிழ்நாட்டில் இருந்து பல ஆயிரம் கோடிகள் கப்பமாக வடக்கிற்கு சென்றதாக செய்திகள் வந்தன அல்லவா.. இது தான் இவர்களின் வெற்றிக்கு வித்தானது.
அதாவது இதுவரை தேர்தல் செலவுகளுக்கு பெரிய முதலாளிகளை நம்பி மட்டுமே இரு பெரும் கட்சிகள் இருந்தன. அவர்களின் தயவால் தான் கடந்த முறை ஆட்சி மாறியது. இம்முறை முதலாளிகளின் தயவு முன்னளவிற்கு இல்லை. சந்தையின் போக்கை வைத்து பார்க்கையில் பெரு முதலாளிகளின் விருப்பமும் காவி கும்பல் மீண்டும் வரவேண்டும் என்பதல்ல. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளின் சந்தை பொருளாதார தந்திரமும் முதலீடும் இவர்களுக்கு ஆதரவாக இல்லை. பிறகு எங்கிருந்து இவ்வளவு பெரிய வெற்றியை பெறக்கூடிய நிதி வந்தது என்றால் தமிழ்நாட்டில் இருந்து கப்பமாக சென்ற பணம் சுளையாக உதவி இருக்கிறது. ஆகவே தான் சட்டமன்ற இடைத்தேர்தலில் ECன் உதவியால் எடப்பாடி அரசு கவிழாமலும் பார்த்துக்கொண்டார்கள் என்று தோன்றுகிறது.

இப்போ திமுகவும்,தமிழ்நாட்டு மக்களும் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இன்னும் இரண்டு வருடத்தில் நடக்க இருக்கும் சட்ட மன்ற தேர்தலில் உள்ளடி வேலை பார்த்து எடப்பாடி அரசே மீண்டும் வர எத்தனிக்கலாம். திமுக சட்டமன்றத்தை கைப்பற்றி ஆட்சி மாறி இந்த Fund Flow உடைந்தால் தான் மத்தியில் ஆட்சி மாறும். இந்தியா காப்பாற்றப்படும். அதற்கும் ஒரு மாமாங்கம் ஆகலாம். அதை உடைக்க வேண்டுமென்றால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் எல்லா எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து பெரும் கூட்டணி வைக்க வேண்டும்.
கேயாஸ் தியரியை பற்றி சொல்லுபோது ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைவில் கூட உலகத்தின் மாற்றம் அடங்கி இருக்கலாம் என்பார்கள். ஜெஜெ உடல்நலக்குறைவு ஏற்பட்ட அன்று அவர் சரியாகி முன்னேற்றம் கண்டு ஒருவேளை அவர் பிழைத்திருந்தால் கதையே மாறி இருக்கலாம்.

கருத்துகள் இல்லை: