செவ்வாய், 25 செப்டம்பர், 2018

தமிழிசை மீது வழக்கு தொடரப்படும் ... சோபியா தரப்பு ...

நெல்லை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் மீது வழக்கு
தொடரப்படும் என மாணவி சோபியா தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
துாத்துக்குடியைச் சேர்ந்த 23 வயது ஆராய்ச்சி படிப்பு மாணவி சோபியா. இவர் கடந்த 3ம் தேதி, சென்னையில் இருந்து துாத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். அதே விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் தூத்துக்குடி சென்றார். அப்போது, அப்போது மாணவி சோபியா பாஸிச பாஜக ஒழிக என விமானத்தில் முழக்கமிட்டார்.
இது தொடர்பாக, தமிழிசை புகாரின்படி, சோபியா கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் தற்போது வெளிவந்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் விளக்கம் அளிக்க சோபியா, அவரது தந்தை மற்றும் வழக்கறிஞர் அதிசய குமார் ஆகியோர் நேற்று நெல்லை வந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சோபியா விமானத்தில் நடந்த சம்பவம் மற்றும் தான் கைது செய்யப்பட்ட பின், நடந்தவை குறித்து விளக்கினார். அவரைத் தொடர்ந்து பேசிய சோபியா தரப்பு வழக்கறிஞர் அதிசயகுமார் தமிழிசை அளித்த புகாரில், மாணவி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், மாணவி தரப்பில், தமிழிசை மீது அளித்த புகார் மீது, எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இது குறித்து, ஆணையத்தில் முறையிட்டோம். காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில் தமிழிசை மீது கோர்ட்டில் வழக்கு தொடர்வோம் என அதிசய குமார் திட்டவட்டமாக தெரிவத்தார்.
tamil.oneindia.com/authors/kalai-mathi.:

கருத்துகள் இல்லை: