மின்னம்பலம் :“திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் வேட்பாளராக யாரை
நிறுத்துவார்கள் என திமுக, அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் தங்களுக்குள் சீரியஸாக டிஸ்கஷனில் இருக்க... எடப்பாடியோ வேறு திட்டத்தில் இருக்கிறாராம். ‘திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை எதுக்காக தனியாக நடத்தணும்? அப்படி நடத்தி ஒருவேளை ஆர்கே நகர் மாதிரி, அங்கே நமக்கு எதுவும் சறுக்கல் வந்துட்டா, அது நாடாளுமன்ற தேர்தல் வரை நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால இடைத்தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்துவதுதான் சரியாக இருக்கும். அதுக்கு என்ன வழியோ அதை யோசிக்கலாம்...’ என்று எடப்பாடி சொல்லி வருகிறாராம்.
திமுக தலைவர் ஸ்டாலின்கூட, இடைத் தேர்தல் வேண்டாம் என்பதில்தான் உறுதியாக இருக்கிறாராம். ‘ இப்போ எதுக்கு ஒரு தேர்தலை நடத்திட்டு தேவை இல்லாத செலவு. அதை நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து நடத்தினால் ஒரே செலவாக முடிஞ்சிடும். தேர்தல் முடிவு எப்படி வரும்னு சொல்ல முடியாது. அப்படி இருக்க.. நாம எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்? இடைத்தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டாம் என நாமும் எதாவது ஒரு வழியில் தேர்தல் ஆணையத்துக்குத் தெரியப்படுத்துவதுதான் நல்லது’ என்று சொல்லி வருகிறாராம்.
எடப்பாடி மற்றும் ஸ்டாலின் கருத்திலிருந்து தினகரன் வேறுபட்டு நிற்கிறாராம். ‘நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு ட்ரெயல் பார்க்க இடைத்தேர்தல் உதவும். அதனால் நல்லதோ கெட்டதோ தேர்தல் உடனே வருவதுதான் நல்லது’ என்று தனது வட்டாரத்தில் சொல்லி வருவதோடு திருப்பரங்குன்றத்தின் வேட்பாளரையும் ரெடி செய்து பணிகளைத் தொடங்கச் சொல்லியிருக்கிறார்.
இடைத்தேர்தல் என்பது தனியாக வேண்டாம் என்பதுதான் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளின் எண்ணமாக இருக்கிறது. அதற்கான வேலைகளில் ரகசியமாக இரு கட்சிகளுமே இறங்கிவிட்டன” என்று முடிந்தது மெசேஜ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக