செவ்வாய், 25 செப்டம்பர், 2018

ஆந்திரா எம் எல் ஏக்களுடன் விவாதித்த பின்பே சுட்டனர்.. பழங்குடிகளின் கோரிக்கைகள் ..

இரு எம் எல் ஏக்களையும்  கடத்திச் சென்ற மாவோயிஸ்ட்டுகள் மரத்தில் கட்டி வைத்து பாக்சைட் தாது நிறுவனங்களால் பழங்குடிகள் அனுபவிக்கும் பாதிப்புகள் குறித்துச் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால், இரண்டு அரசியல் தலைவர்களும் மாவோயிஸ்ட்டுகளை எப்படியும் சமாதானம் செய்துவிட முடியும் என்கிற நம்பிக்கையில் சுமார் ஒரு மணி நேரம் விவாதம் நடத்தி உள்ளனர். இதன் பின்னர்தான் இருவரையும் மாவோயிஸ்ட்டுகள் சுட்டு, படுகொலை செய்துள்ளனர். இருவரும் பாக்சைட் தாது வெட்டி எடுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவும் தரகர்களாகளாம்!
மின்னம்பலம்: ஆந்திராவின் அரக்கு பள்ளத்தாக்கு பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ், மாஜி எம்.எல்.ஏ. சிவேரி சோமா இருவரையும் மாவோயிஸ்ட்டுகளின் பெண்கள்
போலீஸ் வெளியிட்ட மாவோயிஸ்ட் சந்தேக
படைப் பிரிவு  துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகள் அமைதியாக இருந்த ஆந்திரப் பிரதேச மாநிலம் இப்போது மாவோயிஸ்ட்டுகளின் இத்தாக்குதலால் பீதியில் உறைந்துள்ளது. இப்படுகொலைகளுக்குக் காரணமே பாக்சைட் தாது எடுக்கும் பகாசுர கம்பெனிகளுக்கு இருவரும் தரகர்களாகச் செயல்பட்டதுதானாம்.
ஒடிசா, ஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களின் தண்டேவடா, தண்டகாருண்யா வனப்பகுதிகள்தான் மாவோயிஸ்ட்டுகளின் கோட்டை. இப்பகுதிகளில் நாட்டின் எல்லைகளில் குவிக்கப்படும் எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட பல சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த ஆலோசகரான விஜயகுமார் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், “மாவோயிஸ்ட்டுகளின் இறுதிக் காலம் நெருங்கிவிட்டது. 135 மாவட்டங்களில் மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர் . இப்போது 35 மாவட்டங்கள்தான் மாவோயிஸ்ட்டுகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன” எனப் பெருமிதம் தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் தாது வளங்களைக் குறிவைத்து ஆதி பழங்குடிகள் வாழும் மலைகளை விழுங்கும் வேதாந்தா, ஜிண்டால் குழுமங்கள் ஒடிசா, ஆந்திராவில் 'தாது’ வேட்டைக்குப் புறப்பட்டன.
ஒடிசாவின் நியாம்கிரி மலையை வேதாந்தா குழுமம் குறிவைத்தது. அங்கே பாக்சைட் தாதுவை வெட்டி எடுத்து லாஞ்சிகரில் அமைத்த அலுமினியம் சுத்திகரிப்பு தொழிற்சாலைக்குக் கொண்டு வர கன்வேயர் பாதைகளையும் அமைத்தது வேதாந்தா. ஆனால், நியாம்கிரியின் ஆதிகுடிகளான டோங்கிரியா கோண்ட் பழங்குடிகள் அமைதி வழியில் சட்ட ரீதியாக 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்திய போராட்டத்தால் வேதாந்தா குழுமம் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டது. அண்மையில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிரான தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி கொள்ளப்பட்டதைக் கண்டித்து மிகப் பெரும் போராட்டத்தை நடத்தியவர்கள் இந்த டோங்கிரியா கோண்ட் பழங்குடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ஒடிசா - ஆந்திரா எல்லையில் உள்ள அரக்கு பள்ளத்தாக்கில் பாக்சைட் தாது வெட்டி எடுக்கும் பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. பாக்சைட் தாது வெட்டி எடுப்பதால் அப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது என போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இப்பகுதியில் பாக்சைட் தாது வெட்டி எடுக்கும் நிறுவனங்களில் ஒன்று ஜிண்டால். இதுதான் தமிழகத்தின் திருவண்ணாமலை, சேலம் மாவட்ட மலைகளையும் காவு கொள்ள துடிக்கும் நிறுவனம். மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களால் கடந்த ஆண்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அரக்கு பள்ளத்தாக்கு பகுதியில் பாக்சைட் தாது வெட்டி எடுக்கப்படுவது நிறுத்தப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ், மாஜி எம்.எல்.ஏ. சிவேரி சோமாவும் அரக்கு பள்ளத்தாக்கு பகுதியில் மாவோயிஸ்ட்டுகளால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த இருவரையும் கடத்திச் சென்ற மாவோயிஸ்ட்டுகள் மரத்தில் கட்டி வைத்து பாக்சைட் தாது நிறுவனங்களால் பழங்குடிகள் அனுபவிக்கும் பாதிப்புகள் குறித்துச் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால், இரண்டு அரசியல் தலைவர்களும் மாவோயிஸ்ட்டுகளை எப்படியும் சமாதானம் செய்துவிட முடியும் என்கிற நம்பிக்கையில் சுமார் ஒரு மணி நேரம் விவாதம் நடத்தி உள்ளனர்.
இதன் பின்னர்தான் இருவரையும் மாவோயிஸ்ட்டுகள் சுட்டு, படுகொலை செய்துள்ளனர். இருவரும் பாக்சைட் தாது வெட்டி எடுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவும் தரகர்களாக செயல்பட்டதால் நீண்டகாலமாக இவர்களுக்கு மாவோயிஸ்ட்டுகள் குறி வைத்திரு

கருத்துகள் இல்லை: