சனி, 29 செப்டம்பர், 2018

சபரிமலை.. அநீதிகளை துடைத்து போடும் தீர்ப்பு இது.. வழக்கறிஞர் அருள்மொழி

 அருள்மொழி (வழக்கறிஞர்) tamiloneindia :சென்னை: சபரிமலை தீர்ப்பு என்பது அநீதிகளை துடைத்துப் போடும் தீர்ப்பு என வழக்கறிஞர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல தடைவிதிப்பது சட்ட விரோதம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியுள்ளது. இதுகுறித்து அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
அருள்மொழி (வழக்கறிஞர்):
இந்த தீர்ப்பின் முடிவு எப்படி இருக்கும் என நமக்கு தெரியாத ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது இந்த தீர்ப்பு கண்டிப்பாக ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும். ஏன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கக்கூடாது என்று கேள்வி கேட்டதால்தான் கேரளாவில் வெள்ளம் வந்தததற்கு காரணம் என்றார்கள். இப்போது இந்த தீர்ப்பையும் கேட்டபிறகு அவர்கள் என்ன சொல்வார்களோ தெரியாது. எப்படிப்பார்த்தாலும் இந்த தீர்ப்பு சற்று கொந்தளிப்பைதான் கொடுக்கும். இந்துமதம் என்றில்லை, எல்லா மதங்களிலுமே அந்த மதத்திற்குள் இருக்கும் பெண்களின் உரிமைகளை ஆண்கள் மறுப்பதும் அதில் நீதிமன்றம் தலையிட்டு அந்த உரிமையை உறுதி செய்கிறது. இதேபோலதான் முத்தலாக் சட்டத்திலும் பெண்கள் வரவேற்றார்கள், ஆண்கள் அதை எதிர்த்தார்கள் என்பதுதான் உண்மை.


அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார், வழக்கறிஞர் அருள்மொழி போன்றோர் இதனை வரவேற்றுள்ளனர். அத்துடன், உச்சநீதிமன்ற தீர்ப்பு பெண்களும் அர்ச்சகராகலாம் என்ற நிலைக்கு எடுத்துச் செல்லும் என்று தெரிவித்து அதற்கான வேண்டுகோளையும் ரவிக்குமார் வைத்துள்ளார். ஆனால் கண்ணதாசனின் மருமகளும், ஏல்எஸ்நிறுவன உரிமையாளருமான ஜெயந்தி கண்ணப்பன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்களின் முழு கருத்துக்களை அறிய ஒன் இந்தியா தமிழ் முற்பட்டது. அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்:



 ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர்) ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர்)

இது ஒரு மகத்தான தீர்ப்பு. இந்த தீர்ப்புகிற வழங்குகிற நேரத்தில் பக்தி என்பது பாலின பாகுபாடு கூடாது என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது. எந்த ஒரு பழக்கவழக்கங்களும் அரசியல் அமைப்பு சட்டங்கள் நமக்கு வகுத்து தந்துள்ள சமத்துவம் என்ற கோட்பாட்டிற்கு எதிரானதாக இருக்கக்கூடாது. அப்படி இருக்குமானால் அரசியல் அமைப்பு சட்டம்தான் அங்கே மேலாதிக்கம் செலுத்தும். அந்த சமத்துவம் என்ற கோட்பாடுதான் மேம்படும் என்று நீதிபதிகளே தெரிவித்துள்ளனர். இப்போது ஆண்டவன் சன்னதியின் முன்பு ஆண் பெண் என்ற பாகுபாடு கூடாது, பாலிபன பாகுபாடு கூடாது, இதுவே உயிரியல் ரீதியாகவோ, உடலியல் ரீதியாகவோ பாகுபாடு காட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றமே தெளிவுபடுத்தி உள்ளது.


 அர்ச்சனைக்கும் பொருந்தும்

அர்ச்சனைக்கும் பொருந்தும்

வழிபடுவதற்கு மட்டும் அல்ல, அர்ச்சனை செய்வதற்கும் கூட இந்த கூறுகள் பொருந்தும் என்பதை நான் கூற விரும்புகிறேன். ஏற்கனவே ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்களில் பெண்கள் அர்ச்சராக நியமிக்கப்படுவதற்கு எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதியாக இருந்த சந்துரு ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.



பாலின சமத்துவம்

எனவே இப்போது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் பெண்களை அர்ச்சராக நியமிக்கப்படுவதற்கும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்களில் மட்டுமல்ல, ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களிலும் கூட பெண்களை அர்ச்சகராக நியமிப்பதற்கு இன்றைய தீர்ப்பு வழிவகுத்திருக்கிறது. எனவே இந்த தீர்ப்பினை சபரிமலை கோயில் பெண்கள் வழிபட கிடைத்திருக்கிற உரிமை என்பதாக மட்டும் பிரித்து பார்க்காமல், கடவுளின் சன்னதியில் பாலின சமத்துவத்தை உறுதிபடுத்திய தீர்ப்பாக கருதி பெண்களையும் அர்ச்சகர்களாக நியமிக்க அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.







பகவதி அம்மன் கோயில்

 பகவதி அம்மன் கோயில் ஒரு ஆண் இந்து கோயிலுக்கு போனாலும் அந்த பெண்தான் விரதம் இருக்க நேரிடுகிறது. எனவே பக்தியில் உள்ள பெண்கள் கோவிலுக்குள் போவதில் எந்ததடையும் இல்லை. ஆனால் மாதவிலக்கு ஆகும் கோயிலுக்குள் பெண்கள் வரக்கூடாது என்று ஒரு தனியாக நாம் சட்டம் போட்டு பார்க்கவில்லை. அதேபோல பகவதி அம்மன் கோயிலில் ஆண்கள் வரவே கூடாது என்று ஒரு சட்டம் உள்ளது. அதேபோல, மேல்மருவத்தூரில் எல்லாருமே கோயிலுக்குள் வரலாம் என்ற நடைமுறை உள்ளது.



அநீதிகளை மாற்றியுள்ளது

இந்த சபரிமலை கோயில் மட்டும்தான் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது, பெண்களின் உடல்கூறு, அறிவியல் போன்றவற்றை கேவலப்படுத்துவதாக இருந்தது. எனவே சபரிமலை கோயிலுக்குள் நுழையும் பெண்களும் பக்தி உடையவர்கள்தான். 8 வயதில் போகக்கூடிய ஒரு பெண்ணை 10 வயசுக்கு மேல் போகக்கூடாது என்றால் அந்த பெண்ணுக்கு எவ்வளவு மனக்காயத்தை ஏற்படுத்தும்? இந்த மாதிரியான அநீதிகளை மாற்றி இந்த தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.<

கருத்துகள் இல்லை: