தினமலர் :தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக,
முன்னாள் மத்திய
அமைச்சர் சிதம்பரம் நியமிக்கப்படலாம் என தெரிகிறது.
மேலும், செயல் தலைவர்களாக, திருநாவுக்கரசர், தங்கபாலு, பிரசாரக் குழு தலைவராக இளங்கோவன் நியமிக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.'
வரும் லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின்னும், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்; மதவாதத்திற்கு எதிராக, தி.மு.க., தொடர்ந்து போராடும்' என, சமீபத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்மூலம், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் என்பதை, காங்கிரஸ் மேலிடத்திற்கு, ஸ்டாலின் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதையடுத்து, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், நேற்று முன்தினம், சென்னையில், ஸ்டாலினை சந்தித்து பேசினார்.இதற்கிடையில், மேலிடம் அழைப்பை ஏற்று, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், டில்லி சென்றுள்ளார். மேலிட தலைவர்களை சந்தித்து, பதவியை தக்கவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவராக, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை நியமிக்க, மேலிடம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
மேலும், செயல் தலைவர்களாக, இருவரை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.திருநாவுக்கரசர், தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார் ஆகிய நால்வரில், இருவர், செயல் தலைவர்களாக நியமிக்கப்பட உள்ளனர். முன்னாள் தலைவர் இளங்கோவனை, கட்சியின் பிரசாரக் குழு தலைவராக நியமிக்க உள்ளனர்.'ஓரிரு நாட்களில், புதிய தலைவர் அறிவிப்பு வெளிவரும்' என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக