புதன், 15 ஆகஸ்ட், 2018

கலைஞரின் நிலசீர் திருத்த குடியிருப்பு சட்டங்கள்.... இன்று பலரும் மறந்துவிட்ட புரட்சிகர சாதனைகள் ....

Sundaram Kannan : திமுகவினருக்கே அதிகம் தெரியாத கலைஞரின் இரு
முக்கிய நில சீர்திருத்த &; குடியிருப்பு சட்டங்கள்..
1. நில உச்சவரம்பு margin reduction சட்டம்..
இதின் வாயிலாக பெருநிலக்கிழார்களிடம் இருந்த அபரிமிதமான நிலங்களை government land ceiling செய்தது, புறம்போக்கு / பட்டா இல்லாத அந்நிலத்தில் காலப்போக்கில் ஏழை எளிய மக்கள் குடியேறி வாழ்ந்து வந்தவர்கள், தமது இருப்பிடம் என்று வேண்டுமானாலும் பறிக்கப்படும் என்ற நிலையில் அச்சத்துடன் வாழ்ந்த அந்த நிலங்களுக்கு பட்டா வழங்கி அவர்களின் வாழ்வை வளமாக்கியது.
2. தமிழ்நாடு குடியிருப்பு சட்டம் ( Tamilnadu occupants of kudiyirupu Act 1971)
இது மாதிரியான முன்னோடி திட்டம் இன்றளவிலும் வேறு எதுவும் மாநிலங்களில் உள்ளதா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி... சமூகத்தின் அடித்தளத்தில் இருந்து வந்த, அவர்களை பற்றி சிந்தையினிலே இருக்கும் ஒருவரால் தான் இப்படி பட்ட ஒன்றை யோசிக்கவே முடியும்.. ஆனால் இப்படி ஒரு சட்டம் வந்ததும் அதன் மூலம் விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு வீட்டு நிலம் சொந்தமானதும் யாருக்குமே தெரியவில்லை என்பது தான் கொடுமையிலும் கொடுமை..
நிலச்சீர்திருத்தின் அடுத்த கட்ட பாய்ச்சல் இது...நிலச்சீர்திருத்தின் மூலம் விவசாய நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது.... அது நடந்தவுடன் அடுத்து என்ன நடந்தது... அதை தான் கலைஞர் செய்தார்...

விவசாய கூலித் தொழிலர்கள் அனைவரும் பண்ணையார்களுக்கு சொந்தமான இடத்தில் தான் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.. அந்த இடம் பெரும்பாலும் குடியிருப்பு என்று அழைக்கப்பட்டது. நிலத்தை பகிர்ந்து அளித்தவுடன் அவர்கள் செய்த முதற்காரியம், கூலித் தொழிளார்கள் அனைவரையும் இடத்தை விட்டு காலி செய்தார்கள்.. அவர்களிடம் நிலம் இருந்தது.. ஆனால், இருக்க வீடில்லாமல் போனது...
அப்பொழுது கலைஞர் நிறைவேற்றியது தான் குடியிருப்பு சட்டம்...
ஒருவகையில் கம்யூனிஸத்தை திராவிடத் தலைவராக இருந்து செயல்படுத்தியது கலைஞரின் முக்கியமான சமூக நீதி பங்களிப்பாகும்.
With Sundaram Kannan

கருத்துகள் இல்லை: