சனி, 18 ஆகஸ்ட், 2018

வாஜ்பாய் ... குஜராத் கலவர குற்றவாளி மோடி மட்டுமல்ல .. பிரதமர் வாஜ்பாயும்தான் ..


கோவாவில் வாஜ்பாய் :  "முஸ்லிம்கள் ஒரு கரையான்கள், எங்கெல்லாம் அவர்கள் செல்கிறார்களோ ...அங்கெல்லாம் அழிவு. எங்கெல்லாம் அவர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் எப்பொழுதும் வன்முறை"
By Thameem tantra : வாஜ்பாய் ! முதலில் வாஜ்பாய் இறந்ததிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
முதலில் ஒன்றை தெளிவாக சொல்லிவிடுகிறேன்.... யாராக இருந்தாலும் நமக்கு தீங்கே செய்தவாராயினும், ஒரு சக மனிதனின் சாவை கொண்டாடுவதோ அல்லது ஒருவர் இறந்த செய்தியை கேட்டு சந்தோசபடுவதோ கொடூர புத்தியின் செயல். அந்த புத்தியுள்ளவர்களை யாராயினும் எவராயினும் என்னிடத்தில் இருந்து அவர்களை தள்ளியே வைத்து இருக்கிறேன். என்னதான் அவர்கள் சமூக நீதி நாட்டுக்கோழி என்று பேசினாலும் அவர்களின் உண்மை முகமாக அந்த கொடூர புத்தியையே நான் அனுமானிதுருக்கிறேன். I always considered such mindset as cannibalistic behavior.
நிற்க.
அதே சமயம் ஒருவர் இறந்துவிட்டார் என்பதற்காக அவரை புனிதபடுத்துவதும் அக்கிரமம். குறிப்பாக அவரின் தீங்கான செயல்களை மறந்துவிட்டு selectiveவாக நமக்கு எது தோதுவாக இருக்கின்றதோ அதை மட்டும் வைத்து, அவரை இன்னொரு கொடூரமான நபரிடம் ஒப்பிட்டு பிசாசுக்கு பேய் பரவாயில்லை என்று தான் தோன்றி தனமாக எதுவுமே தெரியாமல் உளறுவது. சரி அந்த மினியன்களை விட்டுத்தள்வோம்.
இப்போது விசயத்துக்கு வருகிறேன் !

வாஜ்பாய் என்றவுடன் தானாக எதையுமே முழுமையாக படிக்காதவர்கள், தான் படித்ததாக/தான் அறிவாளி என்று மற்றவரிடம் அடிக்கடி நிரூபிக்க முற்படும் நபர்களின் தான்தோன்றி தனத்தின் உளறல்களை அப்படியே நம்பி "வாஜ்பாய் is Right man in Wrong Place, அவர் ஒரு ஜனநாயவாதி, அவர் ஒரு பூக்காத நெல்சன் மண்டேலா " என்று சொல்வார்கள். அது ஆச்சிரியமும் இல்லை. ஏனினில் நாம் தமிழர் தம்பிகளை இவர்கள் எந்த அளவு வாட்ஸாப்ப் தமிழன் என்று கிண்டல் செய்கிறார்களோ அதே அளவு தான் இவர்களும். என்ன.. அவன் நேரடி கோமாலியிடம் இருந்து படிக்கிறான், இவர்கள் அறிவாளி என்று தன்னை காட்டிக்கொள்ளும் மறைமுக கோமாளிகளிடம் இருந்து படிக்கின்றனர்.
எனக்கு மோடியை விட வாஜ்பாய்களை பார்த்தால்தான் பயம் !
ஏனினில் மோடிக்கு விஷமத்தன்மையோடு வெகு மக்களை கையாளத்தெரியாது, ஆனால் வாஜ்பாய்க்கு வெகு மக்களையே விஷமத்தன்மையாக மாற்ற தெரியும்.
நேரடியாக சொல்லவேணும் என்றால் ...
வாஜ்பாய்தான் ஒரு தீவிர மதவாத இயக்கத்தை தன் முகமூடியால் ஒரு வெகு மக்கள் ஆதரிக்கிற ஓர் அரசியல் கட்சியாக மாற்றினார். மோடிக்கு பொதுவெளியில் பொய் சொல்ல தெரியாது. ஆனால் வாஜ்பாய்க்கு அது கைவந்தகலை. இரட்டை நாக்கு என்று சொல்லுக்கு ஒரு உருவம் கொடுத்தால் அது வாஜ்பாயாகவே இருக்கும்.... ஏனினில் தான் செய்யும் காரியங்கள் அரசியல்ரீதியாக குறிப்பாக சட்ட ரீதியாக மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் ஆனால் அது பொதுவெளியில் பெரிதாக தெரியக்கூடாது என்று மிக கவனமாக இருப்பார். அதுதான் அறிவாளி ப்ராஹ்மணர்களின் சூட்சமம்.
வாஜ்பாயின் நாக்கு எவ்வாறனது ?
பாபரி மசூதியை இடிப்புக்கு முந்தன நாள் பாபரி மசூதியை தரைமட்டமாக்க வேண்டும் என்று பேசுவார்.
பிறகு NDTV அவரை முன்னாள் பிரதமராக பேட்டியெடுக்கும் போது "கரசேவகர்கள் கடப்பாரை எடுத்துக்கொண்டு மசூதியை இடிக்கவேண்டும் என்றுதான் சென்றார்கள் ஆனால் உணர்ச்சிவசப்பட்டு உண்மையாகவே இடித்து விட்டார்கள்"
அதாவது பிரதமர் என்ன சொல்றார்னா ... இடிக்கணும்னுதான் போனங்களாம் தெரியாம எமோஷனல் ஆகி உண்மையாவே இடிச்சுட்டாங்களாம். ஐயோ பாவம் !
வெயிட் வெயிட் ! இது NDTVக்கு !
அடுத்து ஆங்கில பத்திரிக்கைகள் இவரை வெளிநாட்டில் பிடித்துக்கொண்டு கேள்விகளால் துளைக்கின்றன...
அப்போ என்ன சொல்கிறார் ?
"ராமர் மிக சரியாக பாபரி மசூதி இருக்கும் இடத்தில்தான் பிறந்தார் என்று உறுதியாக சொல்லமுடியாது !"
இங்கு இன்னொரு ஜனநாயகவாதியான அத்வானி ஜிக்கு ஹார்ட் அட்டாக் வந்து விட்டது !
குஜராத் கலவரம் நடக்கிறது, ஒரு கலவரம் குறிப்பாக மிக மிக பதட்டமான சூழ்நிலை நிலவும்போது அது சம்பந்தமாக அத்தனை இன்டெல்களும் பிரதமருக்கு(வாஜ்பாய் ) தெரிவிக்கப்படுகிறது. எந்த நடவடிக்கையும் இல்லை. அதாவது கோத்ர ரயில் எரிப்புக்கு பிறகு சுமார் ஐந்து நாட்களுக்கு பதட்டமான சூழ்நிலைக்கு பிறகே ஐந்தாவது நாள் மாலைதான் கலவரம் வெடிக்கிறது. அதுவரைக்கும் வாஜ்பாயிடம் மயான அமைதி. பிறகு கலவரம் சுமார் 15 நாட்களை கடந்து தொடர்ந்து நடக்கிறது. அப்பொழுதும் மயான அமைதி வாஜ்பாயிடம்... அப்போதுதான் முரசொலி மாறன் இந்த பிரச்சனையை வாஜ்பாயிடம் கடுமையாக எதிர்க்கிறார்.
நிறைய பேர் திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது சரியா தவிர என்று வாதிட்டு வருகின்றனர்... இதற்கெல்லாம் முட்டு கொடுக்க தேவையே இல்லை. பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது தவறு மட்டும் அல்ல .. என்னை பொறுத்தவரை அது பெரியாரை செருப்பால் அடித்ததற்கு சமம். என்றுமே அது நீங்க வடுவாகவே இருக்கும். தவறு செய்வது என்பது மனித இயல்பு. அனைவருமே தவறு செய்பவர்கள்தான் ஆனால் அந்த தவறை எதாவது ஒருவகையில் தொடர்ந்து நியாயப்படுத்துவதுதான் கயமைத்தனம், அதை குறைந்த பட்சம் மனிதாபிமானம், நேர்மையுள்ளவர்கள் செய்யமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். back டு point ... லோக் சபாவில் கடுமையான எதிர்ப்பிற்கு பிறகு வாஜ்பாய் வேண்டா வெறுப்பாக மிக விவரமாக மோடி பற்றி குறிப்பிடாமல் குஜராத் கலவரத்தை கண்டிக்கிறார்.
அதான் கண்டிச்சுட்டார்களா ? அப்பறோம் என்ன ? ஹலோ excuse மீ... கண்டிச்சுது வாஜ்பாய் ... mind இட் !
கண்டிச்சு மூன்றே நாட்களில் கோவாவில் RSS பொதுக்கூட்டம் நடக்கிறது (அப்போதும் குஜராத்தில் கலவரம் நடந்துகொண்டுதான் இருக்கிறது, குஜராத் கலவரம் என்பது இரண்டு மாதங்களுக்கு மேலாக நடந்த ஒன்று.. ).... கோவாவில் வாஜ்பாய் பேசுகிறார்...
"முஸ்லிம்கள் ஒரு கரையான்கள், எங்கெல்லாம் அவர்கள் செல்கிறார்களோ ...அங்கெல்லாம் அழிவு. எங்கெல்லாம் அவர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் எப்பொழுதும் வன்முறை"
இவை இந்திய வரலாற்றிலையே ஒரு மாபெரும் கலவரம் நடந்துகொண்டு இருக்கும்போது ஒரு பிரதமர் கூறிய வார்த்தைகள். அதாவது எனக்கு தெரிந்தவரை மோடி பிரதமராக இந்த மாறி ஒரு தடவை கூட பேசியதில்லை.
ஆனால் மாபெரும் அன்பு ஜனநாயகவாதியான வாஜ்பாய் பேசினார் என்பதுதான் வரலாறு.
இதில் இன்னொரு கொடுமை இருக்கிறது....
பலருக்கு நினைவில் இருக்குமா என்று தெரியாது ...
நாடாளுமன்ற தாக்குதலை காரணம் காட்டி POTA என்று சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த அமல்படுத்தப்பட்டது மார்ச் 28,2002.
அப்போது குஜராத் கலவரம் நடந்துகொண்டு இருக்கிறது. இந்த சட்டம் மூலம் குஜராத்தில்தான் முதன் முதலில் பல பேர் வேட்டையாடப்பட்டனர். புரியரமாறி சொல்லுனும்னா.... சட்டத்துக்கு புறம்பாகா கலவரம் மூலியமாகவும்... சட்டப்படி POTA மூலியமாகவும் ஒரே மக்கள் குறிவைத்து வேட்டையாடப்பட்டனர்.
Humans Rights Commission வாஜ்பாயின் மீது சரமாரி புகார்கள் வைக்க, எதையும் கண்டுகொள்ளவில்லை.
இங்கு பலபேர் வாஜ்பாய்யை சம்பந்மே இல்லாமல் ராமர் கோவில், Article 370. பொது சிவில் சட்டம் எல்லாம் கொண்டு வர முயற்சிக்கவில்லை என்று புகழ்ந்து கொண்டு இருக்கின்றனர். யோவ் என்னையா சொல்றீங்க ?
அவர் இருந்தது கூட்டணி ஆட்சி... இப்போ மோடி மிருக பலத்துடன் இருக்கிறார் .. இப்போ மட்டும் மோடி ராமர் கோவில், Article 370. பொது சிவில் சட்டம்னு பேசிட்டா இருக்காங்க ? அப்போ மோடி வாஜ்பாயை விட நல்லவரா ? உங்கள் logicஇல் தீயை வைக்க ! RSSக்கு என்றுமே இந்த மூன்று விஷயங்கள் பிரதானமாக இருந்ததில்லை.... இது எப்போவும் VHPயின் ஓர் பொலிடிகல் அஜெண்டா அவ்வளவுதான்.
அவர்களின் பிரதானமான குறிக்கோள் என்பது infiltrating judiciary and bureaucracy. ஏனினில் அது மட்டுமே நிரந்தர அதிகாரம்.. RSS ஆட்சி அதிகாரத்தை என்றுமே பெரிதாக விரும்பியதில்லை... ஆட்சி மாறக்கூடியது,. ஆனால் judiciary and bureaucracy நிலையானது. வாஜ்பாய் காலத்தில் இது மிக அதிகமாக நடைபெற்றது.
சுருக்கமாக சொன்னால் வாஜ்பாய் ஆண்டது வெறும் ஆறு ஆண்டு காலம் மட்டுமே.
இந்த ஆறு காலத்தில் மிக முக்கியாமான நடந்த சம்வங்கள் ...
1. 1998, ஜனவரியில் கிருத்துவ பாதிரியார் கிரகாம் ஸ்டைன்ஸ் தன் குழந்தைகளோடு பஜ்ரங்தங் அமைப்பினரால் உயிரோடு கொளுத்தப்படுகிறார்.
2. சோ ராமசாமியின் அறிவுரையின் பெயரில் இரண்டு முக்கியமான சம்பவம் நடக்கிறது. 1999ல் ஆட்சிக்கு திரும்ப வந்தவுடன் ஸ்ரீனிவாச ஐயங்காரின் பேரனும் தமிழ்நாட்டின் விஜிலென்ஸ் டைரக்டர்மான RK ராகவன் CBIன் டைரக்டர் ஆக மாறுகிறார். சோ ராமசாமியின் நெருங்கிய நீதிபதி மேலிடத்திற்கு அறிமுகமாகுகிறார்.
3. குஜராத் கலவரம் நடக்கிறது, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுகின்றனர்.
4. POTA சட்டம் வருகிறது. ஆயிரக்கணக்கானோர் வேட்டையாடபடுகின்றனர்.
5. ஜெயலலிதா தமிழ்நாட்டில் மதமாற்றம் தடை சட்டம், கோவில்களில் ஆடு கோழி வெட்ட தடை என்று கொண்டு வருகிறார்.
இதெல்லாம் சரி அதென்ன அந்த அந்த இரண்டாவது பாயிண்ட் ?
வெயிட் மை டியர்.. அந்த RK ராகவன் தான் பிற்காலத்தில் குஜராத் கலவரத்தை விசாரித்த ஸ்பெஷல் investigation டீம்ன் தலைவர். பல நேரடி ஆதாரங்கள் கொட்டி கிடந்தும் மோடிக்கு clean சிட் கொடுத்தவர்.
சரி யாரு அந்த நீதிபதி ? அவர்தான் Justice சதாசிவம் ! அவர்தான் மோடியை உச்சநீதி மன்றத்தில் விடுவித்தவர் !
வாஜ்பாய்யின் நெல்லி படுகொலை பற்றிய பாராளுமன்ற உரையெல்லாம் நீ இன்னும் கேக்கவே இல்ல..
அதெல்லாம் ஒரு தனி history !
இப்போ சொல்லு கண்ணா ... வாஜ்பாய் யாரு ?
அன்பான ஜனநாயகவாதி.... !
ஏன் ?
ஏன்னா ஒப்பீட்டளவில் ஹிட்லரை விட முசோலினி நல்லவர் !
எங்க இருந்தாலும் நல்ல இருங்க முசோலினி அய்யா !
- தமீம் தந்த்ரா

கருத்துகள் இல்லை: