ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

ஈழத்தமிழர்கள் தமிழகத்தின் வெறுப்பை இனியும் சம்பாதிக்க வேண்டுமா? ,,


தமிழ் தேசியம் ஈழம் என்றெல்லாம் கூறிக்கொண்டு அரசியல் நடத்தும் ஜாதி வெறியர்கள் தற்போது கலைஞர் மீது அமில வார்த்தைகளை சேறாக வீசுகிறார்கள்.
ஏற்கனவே ஈழத்தமிழர்கள் புலிகளின் தவறான செயற்பாடுகளால் தமிழ்நாட்டின் வெறுப்பை போதிய அளவு சம்பாதித்து விட்டனர்,
ராஜீவ் காந்தி கொலையை இன்னும் மக்கள் மறக்கவில்லை .. என்றுமே மறக்கவும் மாட்டார்கள் !
அடிப்படையில் ஜாதி வெறியர்கள் எல்லோரும் சேர்ந்து திராவிடத்தை, கலைஞரை, திமுகவை எதிர்பதற்கு இதுதான் சரியான நேரம் என்று எண்ணிக்கொண்டு எதிர்க்கவில்லை.
ஆனால் அவர்களின் அடிமனதில் ஊறியிருக்கும் அடங்காத ஜாதிவெறி தற்போது கலைஞர் உடல்நலம் குன்றி இருக்கிறாரே என்ற ஆனந்தத்தில் முகமூடிகளை உடைத்து கொண்டு வெளியே வருகிறது என்றே கருதவேண்டி உள்ளது
மீண்டும் மீண்டும் ஈழத்தமிழரை இதில் பகடை காய்களாக பயன்படுத்தும் நரி தந்திரத்தை தற்போதும் கையில் எடுத்துள்ளார்கள்.
அதில் புலம் பெயர்ந்த தமிழர்களும் ஓரளவு விழுந்து விட்டார்கள் என்றே தெரிகிறது.
ஈழத்தமிழர்கள் இந்த தமிழக ஜாதிவெறி தமிழ் தேசிய தறுதலைகளின் வயிற்று பிழைப்பு அரசியலை நம்பி
கலைஞர் எதிர்ப்பு
திராவிட எதிர்ப்பு
திமுக எதிர்ப்பு அல்லது வெறுப்பு என்று தொடர்ந்து முன்னெடுத்தால் ..... நாதி அற்று போய்விடுவீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்!

இப்போது தமிழகத்தில் முன்னெப்போதையும் விட திராவிட அமைப்புக்கள் பலம் வாய்ந்தவையாக உள்ளது.
மக்களும் தற்போது அதிகமாக அரசியல் விழிப்பு அடைந்தவர்களாகவே உள்ளனர்.
ஈழத்து இளைஞன் எல்லாம் ஏதோவொரு போராளி என்று எண்ணி உணர்ச்சி வசப்படும் அந்த கால தமிழக மக்கள் தற்போது இல்லை,
எல்லாவற்றிலும் மேலாக மிகவும் பலம் வாய்ந்த தமிழக கட்சியாக திமுகவும் விளங்குகிறது.
தற்போது இருக்கும் ஒரே ஒரு நம்பிக்க நட்சத்திரமாகவும் அதுதான் இருக்கிறது.
இருக்கும் ஒரே ஒரு அரசியல் ஆதரவு சக்தியையும் இழக்கும் காரியத்தில் ஈழத்தமிழர்கள் ஈடுபடக்கூடாது.
ஈழத்தமிழரின் ஏராளமான தவறான முடிவுகளை போலவே அதுவும் இருக்கும்.
கட்டுப்பணத்தை கூட பெற்றுகொள்ள முடியாத உதிரி அரசியல் வியாபாரிகளிடம் உங்கள் சொந்த புத்தியை அடமானம் வைக்க மாட்டீர்கள் என்று கருதுகிறேன்.

2 கருத்துகள்:

Thayalini சொன்னது…

Yes, a worth advice. Thanks for this true concern.

C Emmanuel சொன்னது…

The Political journey of Ceylon@Srilanka after end of CHOLAS EMBIRE documented in MUMUDI CHOLA MANDALAM till it is brought under British Colonial regime and it's actual date of formation, its connectivity with British Madras province are completely required