திங்கள், 13 ஆகஸ்ட், 2018

அழகிரி கடும் குற்றச்சாட்டு : திமுகவில் பதவிகள் விற்கப்படுகின்றன ..

Lakshmi Priya ONEINDIA TAMIL  கலைஞர் கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம்..
அழகிரி பரபரப்பு பேட்டி :
- சென்னை: திமுக தானாகவே உடையும் என்றும் அதை உடைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்றும் மு. க. அழகிரி தெரிவித்துள்ளார்.
 திமுக தலைவர் கலைஞர்  இறந்து நாளையுடன் ஒரு வாரம் ஆகவுள்ளது. இந்நிலையில் அவரது வீட்டில் தற்போது மோதல் வெடித்துள்ளது.
கட்சியில் அழகிரியை சேர்க்க வேண்டும் என கோரி அவர் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசியுள்ளார். திமுகவில் உள்ளவர்கள் பணத்துக்கு விலை போகிறார்கள். நான் அதிருப்தியில் உள்ளதை வெளிப்படுத்தி உள்ளேன். திமுகவில் பதவிகளுக்கு பணத்துக்கு விற்கப்படுகின்றனர். நான் பொறுப்புக்கு வருவதையே கருணாநிதியின் தொண்டர்கள் விரும்புகிறார். தற்போதைய திமுக தலைமை சரியாக செயல்படவில்லை. அப்படி செயல்பட்டிருந்தால் எப்படி ஆர் கே நகர் தேர்தலில் திமுக டெபாசிட்டை இழந்திருக்கும். திமுக தானாக உடையும். அதை உடைக்கும் எண்ணம் எனக்கு இல்லை. நான் அப்படி செய்யவும் மாட்டேன் என்று ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு அழகிரி பேட்டியளித்திருந்தார். நாளை அவசர செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அழகிரியின் பேச்சு அதிரவைக்கிறது.

கருத்துகள் இல்லை: