புதன், 11 ஜூலை, 2018

துப்பாக்கிச்சூட்டின் போது தூத்துக்குடி கலெக்டர் எங்கு சென்றார் ? - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

துப்பாக்கிச்சூட்டின் போது தூத்துக்குடி கலெக்டர் எங்கு சென்றார் ? - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
மாலைமலர் : தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவம் தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர்களிடம் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதிகள் இன்று சரமாரி கேள்விக் கணைகளை தொடுத்தனர். மதுரை : தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவத்தில் தலைமை செயலாளர் மற்றும் உள்துரை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட துப்பாக்கிச்சூடு தொடர்பாக 15 வழக்குளை ஒன்றாக சேர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நிதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 99 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தை முடுவுக்கு கொண்டுவர எடுத்த நடவடிக்கைகள் என்ன? துப்பாக்கிச்சூட்டில் என்ன வகையான துப்பாக்கிகள் உபயோக படுத்தப்பட்டது? துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றபோது ஆட்சியர் ஊரில் இல்லாமல் எங்கு சென்றார் ? என இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் சரமாரி கேள்விகளை கேட்டனர். மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகளை நீதிமன்றத்தில் சமர்பிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: