ஞாயிறு, 8 ஜூலை, 2018

மருத்துவச் சேவையில் தமிழகம் முன்னோடி!... நீட்டு கொண்டாந்துட்டோம்ல .. துணை வெங்காயம்

மருத்துவச் சேவையில் தமிழகம் முன்னோடி!மின்னம்பலம்: மருத்துவச் சேவை வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடியாக உள்ளது என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக 30ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று (ஜூலை 8) நடைபெற்றது. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற விழாவில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராகக் பங்கேற்று பேசுகையில், ”மருத்துவச் சேவை வழங்குவதில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது. ஒவ்வொரு மாவட்ட தலைநகர்களிலும் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
மருத்துவர்கள் குறைந்தது 3 ஆண்டுகளாவது கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும். கல்வி மற்றும் மருத்துவத் துறையில் தனியார் பங்களிப்பை நாம் ஊக்குவிக்க வேண்டும்.
அதேசமயம் அதற்கான வரையறைகளும் சரியாக வகுக்கப்பட வேண்டும். அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையில் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். கல்வி, மருத்துவம் தரமாக உள்ளதா எனத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் மேலும் 2 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது” என்று கூறினார்.
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விஜயபாஸ்கர் பேசுகையில், “மக்கள் நல்வாழ்வுத்துறையில் தமிழகம் முதல் மாநிலமாகத் திகழ்கிறது. பட்டம் பெறும் மருத்துவ மாணவர்கள் அனைவரும் புன்னகையுடன் சேவை செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் 4529 மாணவ மாணவிகள் பட்டம் பெற்றனர். 164 மாணவ மாணவிகளுக்குப் பதக்கம் வழங்கப்பட்டது. 37 பேர் முனைவர் பட்டம் பெற்றனர்.

கருத்துகள் இல்லை: