ஞாயிறு, 10 ஜூன், 2018

கனடாவில் கஞ்சாவுக்கு அனுமதி ..நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது


தினமலர் :கனடா:கஞ்சா விற்பனைக்கு சட்டப்பூர்வ அனுமதியளிக்கும்
மசோதா கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கனடாவில் மருத்துவத்துக்காக கஞ்சாவைப் பயன்படுத்த அனுமதி உள்ளது. ஆனால் போதைப் பொருளாக பயன்படுத்த தடை உள்ளது. 2015-ஆம் ஆண்டு தேர்தலின்போது கஞ்சா விற்பனைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுக்கப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாக்குறுதி அளித்திருந்தார்.அதன்படி 18 வயதுக்குள்பட்டவர்கள் 30 கிராம் வரை கஞ்சா வைத்திருக்க அனுமதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த நவம்பரில் நிறைவேற்றப்பட்டது.மேலவையில் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு ஆதரவாக 52 வாக்குகளும், எதிராக 30 வாக்குகளும் பதிவாகின.
கனடாவின் தேசிய நாளான ஜூலை 1- முதல் சட்டப்பூர்வ கஞ்சா விற்பனை தொடங்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே, உருகுவே நாடும், அமெரிக்காவின் 5 மாகாணங்களும் கஞ்சா விற்பனைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், ஜி7 நாடுகளிலேயே முதல் முறையாக கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும், வாங்கிப் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கும் முதல் நாடாக கனடா ஆகவிருக்கிறது.<

கருத்துகள் இல்லை: