Shalin Maria Lawrence : எனது நண்பர் அறிவழகன்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த இவர் நாகூரில் உள்ள ஒரு சேரி பகுதியில் ,அதுவும் கைகளால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் பிறந்து வளர்ந்தவர்.
வங்கதேசத்து கம்யூனிஸ்ட் சாரு மஜ்முதார் நினைவாகவும்,நிவேதிதா அம்மையார் நினைவாகவும் சேர்த்து தன் பெயரை சாரு நிவேதிதா என்று மாற்றி கொண்டார்.
இன்று வரை ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலையும், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலையும் தன் படைப்புகள் மூலம் பேசி கொண்டிருக்கிறார்.
பல வெளிநாட்டு ஆங்கில பத்திரிகைகளில் அவர் ஒடுக்கப்பட்டவர்கள் பற்றி எழுதிய கட்டுரைகள் அதிகம்,அதிலும் குறிப்பாக லண்டனில் இருந்து வெளியாகும் "Art review Asia" என்கிற பத்திரிகையில் தொடர்ச்சியாக கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் அவலங்களை பற்றிய அவருடைய கட்டுரைகள் பிரசித்தி பெற்றவை.
அந்த கட்டுரைகள் பல அவரின் "unfaithfully yours " புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன .
இன்று அறிவழகன்.... இல்லை சாரு நிவேதிதா காலவை பற்றி ஒரு விமர்சனம் பதிவிட்டார்.
பலரும் அந்த விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
அதற்கு எதிர்வினையாக கருத்தியல் சண்டை போடாமல் வலதுசாரிகளின் முறையான தனிமனித தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர்.
நமக்கு பிடித்த ஒரு இயக்குனரின் படத்தை அதுவும் தலித்தியம் பேசும் படத்தை நேர்மறையாக விமர்சித்து பெரும்பாலானோரின் மனதை புண்படுத்தும் .அதுதான் நிதர்சனம்...ஆனால் அதற்காக இழிவு சொல் பயன்படுத்துவது அம்பேத்கரின் வழித்தோன்றங்களின் செயல் அல்ல.
சாருவை நேருக்கு நேராக விவாதத்திற்கு அழைத்து நீங்கள் படத்தை விளக்கலாம்.அது சரியான செயல்.
இல்லை வரும் நேர்மறை விமர்சனதுக்கெல்லாம் எடுத்தோம் கவுத்தோம் என்று சண்டை போட்டு கொண்டிருந்தால் நம் கொள்கையை எப்படி பரப்ப முடியும்?
ஒரு படம் ஒருவருக்கு பிடிக்கும்,இன்னொருவருக்கு பிடிக்காது அதற்காக சண்டைக்கு போக முடியுமா?
அதிலும் அவர் அதில் பேசிய அரசியலை விமர்சனம் செய்யவில்லை,திரையாக்கத்தைதான் விமர்சித்து இருக்கிறார்.
கடந்த வருடங்களாக இலக்கிய துறையில் ஒடுக்கப்பட்டவர்களின் வெற்றியின் அடையாளமாக சாரு இருக்கிறார்.
நாகூர் சேரியில் பிறந்த ஒரு பையனின் புத்தகம் அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் பாடாமாகிறது என்பதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம்?
ஆமாம் அவர் ஆங்கிலத்தில் ஈடுபாடு உள்ளவர் ,வெளிநாட்டு விஷயங்களை அதிகம் பேசுவார்,ஸ்டைலாக இருப்பார்.சேரியில் பிறந்து முன்னேறியவர்களுக்கு இது புதிது கிடையாதே?
ஒடுக்கப்பட்டவர்கள் லத்தின் சிறுகதைகள் பேசுவது எல்லாம் சமூகத்தில் நமது பெருமையை ,சமத்துவத்தை நிலைநாட்டுவது தானே?
சாரு எப்படியோ அதேல்போல் தான் ரஞ்சித்தும் ஒடுக்கப்பட்டவர்களின் வெற்றியின் அடையாளம்.பரிணாமம் தான் வேறு,வழிகள்தான் வேறு.ஆனால் இரண்டுமே வெற்றிதான்.
எனக்கு இருவரும் முக்கியம்.
அவர் விமர்சனத்தில் பிரச்சனை இருந்தால் சண்டை போடுவேன் ஆனால் அவரை அசிங்கப்படுத்தமாட்டேன்.
அதுவும் அவரை போல் ஆக்கபூர்வமான விமர்சனத்தை அரவணைக்கும் குணம் பலருக்கு கிடையாது.
அதுமட்டுமில்லாமல் மாட்டிறைச்சி கொலைகள்,தலித் வன்கொடுமைகள்,காவி பயங்கரவாதம் பற்றி தொடர்ச்சியாக இந்திய மற்றும் சர்வதேச வெகுஜன பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.
குறிப்பாக சில வருடங்கள் முன்பு முகநூலில் "ஜெய் பீம் காம்ரேட் " என்கிற மராட்டிய மொழி தலித்திய ஆவண படத்தை பற்றி எழுதி அந்த படத்தை பார்க்காதவர்கள் அவரின் நட்பு வட்டத்தில் இருந்து விலகி விடுங்கள் என்று சொல்லிவிட்டார்.பின்பு அவர் நண்பர்கள் அனைவரும் அந்த படத்தை CD வாங்கி பார்த்தனர்.
இரண்டு நாள் முன்பு தமிழகத்தில் தலித் ஒருவருக்கு லிப்ட் கொடுத்து பின்பு சாதி தெரிந்து அவரை தாக்கிய கொடூரத்தை பற்றி இருவர் மட்டுமே எழுதினார்கள். ஒருவர் evidence கதிர், இன்னொருவர் சாரு.
இன்று கூட news விவாதத்தில் ஹிந்துத்துவத்தின் கோர முகத்தை கிழி கிழி என்று கிழித்தார்.
என்ன பிரச்சனை என்றால் அவருக்கு சில விஷயங்களை இப்படி எடுத்து சொல்ல தெரியாது.
நான் சாரு நிவேதிதா எனும் ஒடுக்கப்பட்டவரை இந்த காலா விமர்சனத்திற்கு பின்னாலும் கொண்டாடுவேன். ஏனென்றால் இங்கே
நமக்கு ரஞ்சித்தும் தேவை,சாருவும் தேவை.
"Think Like Ambedkar"
ஷாலின்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக