ஞாயிறு, 10 ஜூன், 2018

அழகிரி : இப்போது திமுகவில் இருப்பவர்கள் பதவிக்காக இருப்பவர்கள்

Azakiriவிகடன் -செ.சல்மான்- ஈ.ஜெ.நந்தகுமார் : 
மு.க.அழகிரியின் விசுவாசிகளில் முதன்மையானவரான பி.எம். மன்னனின் மகள் திருமணம் இன்று மதுரை வேலம்மாள் மஹாலில் பிரமாண்டமாக நடந்தது. இதில் தங்க தமிழ்செல்வன், முன்னாள் எம்.பி.சித்தன், திரைப்பட இயக்குநர் பாலா, விஜயகுமார், சமுத்திரக்கனி, சூரி, ஆர்.கே.சுரேஷ், பா.ஜ.க. அரசகுமார் என அரசியல் மற்றும் திரையுலகத்தினர் கலந்து கொண்டனர். காலை11 மணிக்கு மு.க.அழகிரி, அவர் மனைவி காந்தி அழகிரி, துரை தயாநிதி ஆகியோர் மண்டபத்துக்கு வந்தனர். அழகிரி தாலியை எடுத்துக் கொடுக்க திருமணம் நடைபெற்றது.
பின்பு மணமக்களை வாழத்த மைக் பிடித்த அழகிரி, "என்னுடன் இருப்பவர்களில் முக்கியமானவர் மன்னன். இவர் பதவிக்காக என்னுடன் இருந்ததில்லை. இப்பொழுது தி.மு.க.வில் இருப்பவர்கள் எல்லோரும் பதவிக்காக இருப்பவர்கள். பல இடைத்தேர்தகளில் திமுக வெற்றி பெற பாடுபட்டவர் மன்னன்.
அவருடையை இன்ஷியல் பி.எம். அப்படியென்றால் பிரைம் மினிஸ்டர் ஆகும் தகுதி பெற்றவர்.  ஆனால், அவர் அதற்கெல்லாம் ஆசைப்பட்டதில்லை. அவர் டி.எம்.தான். முன்னாள் டெபுடி மேயர். மணமக்கள் மன்னன் போல் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்று குஷியாக பேசினார்.
tamil.oneindia.com- Lakshmi Priya : சென்னை: தேர்தல் வந்தால் எத்தனை பேர் வெளியே வருவர் என்பது தெரியும் என்று கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் அமைச்சருமான அழகிரி தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனான அழகிரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அவர் இத்தனை ஆண்டுகளில் இரண்டு மூன்று முறை மட்டுமே கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று தயாளு அம்மாவை சந்தித்தார். அழகிரியை சமாதானப்படுத்தும் முயற்சிகள் அனைத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் மு.க.அழகிரி சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், திமுகவில் தற்போது இருப்பவர்கள் எல்லாம் பதவிக்காக மட்டுமே உள்ளனர் என்றும், தேர்தல் வந்தால் எத்தனை பேர் இருப்பார்கள், எத்தனை பேர் போவார்கள் என்பது தெரியும்.
உண்மையான தொண்டர்கள் இன்னும் என்னுடன் தான் இருக்கிறார்கள் என்றார். அண்மையில் திமுகவில் நநடைபெற்ற போராட்டங்களின் மூலம் அரசியலில் அடியெடுத்து வைத்த உதயநிதி ஸ்டாலினை அழகிரி கடுமையாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: