மாலைமலர் :ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் கார்த்தி
சிதம்பரம் மீது டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் அமலாக்கத்துறையினர்
இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
புதுடெல்லி:
ஏர்செல்
தொலைத்தொடர்பு நிறுவனத்தில் சுமார் 3500 கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு
நிதிக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் சில முறைகேடுகள் நடைபெற்றதாக முன்னாள்
மத்திய மந்திரி ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மீது
அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த
வழக்கில் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது தந்தையை கைது செய்ய டெல்லி
பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் தடை விதித்திருந்தது. இந்நிலையில், கார்த்தி
சிதம்பரம் மீது அமலாக்கத்துறையினர் கோர்ட்டில் இன்று குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்துள்ளனர்.&
இந்த வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்திடம் நேற்று சுமார் 6 மணி நேரம் அமலாக்கத்துறையினர் விசாரனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக