செவ்வாய், 12 ஜூன், 2018

சேலம் எட்டு வழிச்சாலை 20,000 ஏக்கர் விவசாய நிலம் பறிக்கப்படும்?

பகுதிகள் "Shyamsundar" - tamil.oneindia.com: தொடரும் எதிர்ப்பு...சேலம் 8 வழி சாலையில் என்னதான் பிரச்சனை?- வீடியோ சென்னை: சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலை காரணமாக மொத்தம் மூன்று மாவட்ட விவசாயிகளின் வாழ்க்கை தரம் பாதிக்கப்பட உள்ளது. மொத்தமாக அவர்களின் விவசாய நிலங்கள் அவர்களின் கைவிட்டு போக உள்ளது.
சேலம் - சென்னை 8 வழி சாலை அமைக்கப்படுவது உறுதி என்று தமிழக முதல்வர் சட்டசபையில் இன்று அறிவித்துள்ளார். இந்த சாலைக்கு எதிராக போராடி வரும் மக்கள் இதனால் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்த சாலை போடப்படும் என்று அறிவிப்பு வெளியானதில் இருந்தே மக்கள் இதற்கு எதிராக போராடி வருகிறார்கள். இந்த சாலையால் பல ஆயிரக்கணக்காக விளை நிலங்கள் பாதிக்கப்பட உள்ளது. இந்த 8 வழி சாலை சென்னையில் இருந்து சேலம் வரை போடப்படுகிறது. இதில் எதிர்புறத்தில் நான்கு வாகனமும், அதற்கு எதிர் புறத்தில் 4 வாகனமும் வரும் வகையில் மிகவும் பெரிய அளவில் சாலை போடப்பட உள்ளது. இந்த சாலைக்காக மொத்தம் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளது. மொத்தம் 274 கிமீ தூரத்துக்கு சாலை போடப்பட உள்ளது.




பகுதிகள்

சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வழியாக சென்னை செல்லும் வகையில் இந்த சாலை அமைக்கப்படுகிறது. இதன் மூலம் சென்னைக்கு சேலத்தில் இருந்து மிக விரைவாக சென்று சேர முடியும். ஆனால் இந்த சாலை முழுக்க முழுக்க விவசாய நிலங்களிலும், சில குடியிருப்பு பகுதிகளிலும் போடப்பட உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.


மொத்த விவசாய நிலம்

மொத்த விவசாய நிலம்

மொத்தம் இதற்காக 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. குடியிருப்பு நிலங்களும் கணிசமான அளவில் கையகப்படுத்தப்பட உள்ளது. விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் பெரும்பாலான கிராமங்கள் இதனால் பாதிக்கப்படும். சேலத்தில் மட்டும் பூலாவரி, நிலவாரப்பட்டி, நாழிக்கல்பட்டி, குப்பனூர், ஆச்சாங்குட்டப்பட்டி ஆகிய கிராமங்களில் மொத்தமாக விவசாய நிலங்கள் இதனால் அழிந்து போகும்.


ஏற்கனவே

ஏற்கனவே

சேலத்தில் ஏற்கனவே நாற்கர சாலை சிறப்பாக இயங்கி வருகிறது. இந்த சாலையிலேயே இதுவரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இல்லை. ஆனால் தற்போது தேவையில்லாமல், 8 வழி சாலை போடப்படுகிறது. இந்த சாலைக்கு எதிராக போராடும் சேலம் மக்களை போலீஸ் இரவோடு இரவாக கைது செய்து வருகிறது. இந்த சாலை திட்டம், விவசாய மக்களின் வாழ்வை அடியோடு பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: