ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

கர்நாடகா தனிக்கொடி வெளியிட முடிவு? மாதிரியை வெளியிட்டது !

தனிக்கொடி வெளியிட கர்நாடகா முடிவு? மாதிரியை வெளியிட்டதால் பரபரப்புதினமலர் : தனிக்கொடி வெளியிட கர்நாடகா முடிவு? மாதிரியை வெளியிட்டதால் பரபரப்பு பெங்களூரு : சட்டசபை தேர்தலுக்குள், கர்நாடகாவின் கலாசார அடையாளத்துடன் கூடிய கொடியை உருவாக்க,அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தல்,விரைவில் நடக்க உள்ளது. 9 பேர் குழு 'ஒரு தேசம்; ஒரு கொடி' என்ற கோஷத்துடன், பா.ஜ., பிரசாரம் செய்கிறது. இந்நிலையில்,கர்நாடக அரசு, தங்களுக்கென, பிரத்யேகமாக கொடியையும் வடிவமைத்து உள்ளது.ஒன்பது பேர் அடங்கியகுழுவினர் வடிவமைத்த இந்த கொடியில்,மஞ்சள், வெள்ளை, சிவப்பு நிறங்கள் இடம் பெற்றுள்ளன.
போராட்டம் கொடியின் மையப்பகுதியில், மாநில முத்திரை இடம் பெற்றுள்ளது. அடுத்த வாரம் நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த கொடிக்கு அனுமதி வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அரசு உருவாக்கிய கொடிக்கு, பல்வேறு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.'

கொடியில் இடம் பெற்றுள்ள வெள்ளை நிறத்தை நீக்காவிட்டால், போராட்டம் வெடிக்கும்' என,எச்சரித்துள்ளன. இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு, 370ன் கீழ், ஜம்மு - காஷ்மீருக்கு மட்டும், தனிக் கொடி உருவாக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது, கர்நாடகாவின் தனிக் கொடிக்கு, அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு, மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை: