செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

பிரம்மா குமாரிகள்! அடிமைகளாக்கி பணம் பறிக்கும் கும்பல் !Brahma Kumaris hidden doctrine.

All Non Followers Beware Stay Away from bk’s …bk are maniacs and you ebenezer just behaved in a same manner that cults and fake people behave you just said “just leave us alone” so who dont like bk. have no right to speak there mind and criticise bk.. Like or leave us alone!! This is typical cult behavior… You are the most dangerous cult the worst people i have ever seen…
https://hiddendoctrine.wordpress.com/2010/01/29/about-brahma-kumaris/

Sivasankaran Saravanan பிரம்மகுமாரிகள் என்ற அமைப்பு வள்ளுவர்கோட்டத்தில் லிங்க தரிசன கண்காட்சி ஒன்றை நடத்துகிறார்கள். அதிலே பாரதத்தின் வரலாறாக சில பேனர்களை காட்சிக்கு வைத்துள்ளனர். நாராயணன், கிருஷ்ணருடன் தொடங்குகிற அந்த வரலாற்றில் பிராமணர்கள் கலைகள் நிறைந்தவராக உள்ளனர். ராமர் தான் சத்ரிய வம்சத்தை ஆரம்பித்து வைக்கிறார். சீதையுடன் ராம ராஜ்யம் நடத்துகிறார் . ராவண ராஜ்யத்தில் கொடுமைகள் நடக்கின்றன. அதைத்தொடர்ந்து கலியுகத்தில் கலையம்சம் ஏதுமற்ற சூத்திர சாதியினர் வருகிறார்கள். அதைத்தொடர்ந்து குற்றங்கள் பெருகுகின்றன! மகாபாரத வம்சத்தில் சிவனுடைய அன்பை பெற்ற பிராமணர்கள் தற்போது அமைதியை ஏற்படுத்திவருகிறார்கள்! அதுவும்போக சிவபரமாத்மா தான் ஏசு வாகவும், இப்ராகிமாகவும், புத்தராகவும் அவதரித்து முறையே கிறித்தவ, இஸ்லாமிய, பவுத்த மதங்களை பரப்புகிறார்..
;இலங்கையில் இந்த பிரம குமாரிகள் அமைப்பு  கிழக்கு மாகாணத்தில்  ஒரு இஸ்லாமிய வணக்கஸ் தலத்தை அபேஸ் பண்ணி  உள்ளது ...விபரங்கள்இதோ :

 //lankamuslim.org/   மஸ்ஜிதுல் பிர்தௌஸ் அன்று
பிரம்ம குமாரிகளின் இராஜ யோக நிலையம் இன்று


பிரம்ம குமாரிகளின் இராஜ யோக நிலையம்
எமது முந்திய பதிவுகள்:

பிரமகுமாரிகள் இராஜயோக நிலையமாக மாறியுள்ள மஸ்ஜிதுல் பிர்தௌசை மீட்கும் வழக்கு
with 2 comments
ஏ.அப்துல்லாஹ் : மட்டகளப்பு – கள்ளியங்காடு பிரமகுமாரிகள் இராஜயோக நிலையமாக மாறியுள்ள மஸ்ஜிதுல் பிர்தௌஸ் மீட்பதற்கு  மட்டகளப்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மூன்றாம் கட்ட விசாரணை இன்று நடைபெறவுள்ளது .
மஸ்ஜிதுல் பிர்தௌஸ் மீட்பதற்கு நீதிமன்றத்தை நாடவுள்ளதாக காத்தான்குடி மஸ்ஜிதுகள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் MIM.சுபைர் lankamuslim.org க்கு சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார் .தற்போது மஸ்ஜிதுல் பிர்தௌஸ் அமைத்திருந்த காணியை மீட்பதற்காக வழக்கு இன்று நடைபெறவுள்ளது .
மஸ்ஜிதுல் பிர்தௌஸின் முன்னாள் தலைவர் டாக்டர் துவான் ஆரிப் அந்த வழக்கை தாக்கதல் செய்திருந்தார் .சட்டத்தரணி அமீன் மூலமாக தாக்கதல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பிரதிவாதிகளாக மட்டகளப்பு பண்முனை வடக்கு பிரதேச செயலாளர், மஸ்ஜிதுல் பிர்தௌஸ் இடத்தில் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள பிரமகுமாரிகள் இராஜயோக நிலையமாக மாறியுள்ள கட்டிடத்தின் நிர்வாகிகள் ,சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடபட்டுள்ளனர். அந்த வழக்கில் எமக்கு உரித்தான மஸ்ஜிதை எம்மிடம் கையளிக்குமாறு டாக்டர் டாக்டர் துவான் ஆரிப் தெரிவித்துள்ளார்
மஸ்ஜிதுல் பிர்தௌசும் , அதற்கு அண்மையிலுள்ள மையவாடியும் மட்டகளப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தில் கள்ளியங்காடு என்ற பகுதியில் அமைந்துள்ளது. முஸ்லிம்கள் கள்ளியங்காட்டில் குடியேறி வாழ முன்னரே முஸ்லிம் மையவாடிக்கு முன்பாக கொட்டில் வடிவில் ஒரு சிறு பள்ளிவாயல் அங்கு இறந்தவர்களுக்காக செய்யப்படும் ஜனாஸா தொழுகை நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்தது என்று அறியப்படுகிறது. கோட்டமுனை முஸ்லிம்கள் காட்டை அழித்து குடியேறிய பின்னர் கள்ளியங்காடு முஸ்லிம் கொலனி என்று அறியப்பட்டது. அரசாங்கம் அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் இறங்கிய போது, முன்னாள் எம் பீ மார்க்கான் மார்கார் அவர்களுக்கான அரச அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொடுத்தார் .
அதன் பின்னரே 1965 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் தங்களுக்கான பள்ளிவாயலை அங்கு உத்தியோக பூர்வமாக கட்டி எழுப்பினர். அன்றிலிருந்து கள்ளியங்காடு முஸ்லிம் கொலனியின் தேவைகளை மறைந்த முன்னாள் அமைச்சர் பாரிட் மீராலேப்பையும் கவனித்துள்ளார். இவற்றுக்கு போதுமான சான்றுகள் ஆதாரங்கள் உண்டு என்று பிரதேச சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
2010 ஆம் ஆண்டு மஸ்ஜித்தை  பிரமகுமாரிகள் இராஜயோக நிலையமாக மாற்ற முயற்சிகள் இடம்பெற்றபோது அப்பள்ளிவாசலின் முன்னாள் தலைவரான டாக்டர் துவான் ஆரிப் சராவுதீன் மாவட்ட அரசாங்க அதிபரையும், காணி ஆணையாளரையும் அந்த முயற்சிகளை தடுத்து நிறுத்தி மஸ்ஜித்தின் காணியை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியிருந்தார் .
இதுதொடர்பாக அவர் கடந்த 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி மேற்படி அரசாங்க அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள முறையீட்டுக் கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மேற்படி விடயமாக நானும், எம்.ஏ. சித்தீக் என்பவரும் 2010.02.25 ஆம் திகதி மட்டக்களப்பு பிரதேச செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களை செயலகத்தில் நேரடியாகச் சந்தித்து கூறினோம். அதற்கு பிரதேச செயலாளர் கூறிய பதில் வார்த்தைகள் எமது மனதை மிகவும் புண்படுத்தின.
”தமிழ்ச் சமூகம் வாழும் இடத்தில் நீங்கள் எப்படி பள்ளிவாசல் கட்ட முடியும்? அந்த இடம் முடிக்குரிய காணியாகையால் நாங்கள் எதையும் செய்வோம். நான்தான் அந்த இடத்தில் கட்டிடம் அமைக்க அனுமதியளித்துள்ளேன். உங்களுக்குத் தேவையானால் பள்ளிவாசலை உங்கள் சவக்காலைக்குள் கட்டிக் கொள்ளுங்கள் என பொறுப்பற்ற முறையில் அவர் கூறினார்.”
எல்லா இன மக்களையும் சமமாக மதித்து நீதி வழங்கக்கூடிய அதிகார பீடத்தில் இருக்கும் ஒருவர் இவ்வாறு கூறும்போது நாங்கள் யாரிடம் போய் முறையிடுவது? ஆகவேதான் இதனை தங்களின் கவனத்திற்கு அறித்தருகின்றோம். தாங்கள் ஆவன செய்வீர்கள் எனவும் நம்புகின்றோம்.
கடந்த 1962ஆம் ஆண்டிலிருந்து சுமார் 175க்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் இங்கு வசித்து வந்தோம். திரு. செ. இராஜதுரை அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அவர்களால் இருதயபுரம், மாமாங்கக் கொலனி, கூலாவடிக் கொலனி ஆகிய முடிக்குரிய காணிகளை தமிழ் மக்களுக்காக வழங்கப்பட்டபோது, சேர். மாக்கான் மாக்கார் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வேளையில் கோட்டைமுனையில் காணியற்ற முஸ்லிம்களுக்காக முஸ்லிம்களின் மையவாடிக்கு அருகிலிருந்த கள்ளியங்காடு என்னும் இடத்தைப் பெற்றுத் தந்தார்.
முஸ்லிம்களுக்கென ஒதுக்கப்பட்ட அந்த இடம்தான் முஸ்லிம் கொலனி எனப் பெயர் பெற்றது. இங்கு பல ஆண்டுகளாக தமிழர், முஸ்லிம்கள் எனப் பாகுபாடின்றி ஒரு தாய் மக்கள் போல் நாம் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தோம்.கடந்த பயங்கரவாதத்தை சாதகமாகப் பயன்படுத்தி சில இனவாதிகளால் அந்த இடத்திலிருந்து முஸ்லிம்களை அப்புறப்படுத்தப்பட வேண்டுமென திட்டமிடப்பட்ட சூழ்ச்சிகளினால் நாம் குடியிருந்து வந்த எமது சொந்த இடங்களை இழக்க நேரிட்டது.
பயங்கரவாதத்தின்போது இடம்பெயர்ந்தோரின் காணிகளை வாங்குவதற்கு அரசாங்கம் தடை விதித்திருந்த போதிலும் அவை கவனத்திற் கொள்ளப்படவில்லை. அப்போதிருந்த சில அதிகாரிகளும் வாங்கியவர்களுக்குச் சாதகமாகவே இருந்தனர்.
இப்போது பயங்கரவாதம் நீங்கி எல்லா இன மக்களும் ஒற்றுமை யாக அச்சமின்றி வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கித் தந்த மேன்மைதங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் இன்று மீள்குடியேற்றம், வன்செயலின்போது சேதமுற்ற கோவில்கள், மஸ்ஜிதுகள் போன்றவற்றை எல்லாம் புனருத்தாரணம் செய்து வரும் இவ்வேளையில் ஏன் எங்களது பள்ளி வாசலைக் கட்டக் கூடாது?
நாங்கள் புதிதாக அந்த இடத்தில் பள்ளிவாசலைக் கட்டவோ அல்லது இன்னொருவருக்குரிய காணியில் அத்துமீறிக் கட்டவோ கேட்கவில்லை. கடந்த 1990ம் ஆண்டு பயங்கரவாதத்தின்போது உடைத்துச் சேதமாக்கப்பட்ட எங்களது பள்ளிவாசலை முன்பு அது இருந்த இடத்தில் புனரமைத்துக் கட்டவே கோருகின்றோம்.
ஆகவே தயவுகூர்ந்து அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதை உடனடியாக தடைசெய்து எங்களது பள்ளிவாசலுக்குரிய இடத்தைப் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கின்றோம். – என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஸ்ஜிதுல் பிர்தௌஸ் அன்று
பிரம்ம குமாரிகளின் இராஜ யோக நிலையம் இன்று
பிரம்ம குமாரிகளின் இராஜ யோக நிலையம் இன்று

கருத்துகள் இல்லை: