Kalai Marx
·
: அமெரிக்காவின் எதிர்காலம் பற்றி அங்கு வாழும் பணக்காரர்கள் என்ன
நினைக்கிறார்கள்? அவர்கள் ஒரு ஊழிக்காலத்திற்கு தயாராகிக்
கொண்டிருக்கிறார்கள். ஏழை, பணக்கார இடைவெளி அதிகரித்து வருவதால்,
இழப்பதற்கு எதுவுமற்ற மக்கள் ஒரு வர்க்கப் போருக்கு தயாராகலாம்.
அப்போது எந்தவொரு பணக்காரரும் தமது சொத்துக்களை காப்பாற்றிக்
கொண்டு பாதுகாப்பாக வாழ முடியாத நிலை வரலாம். அத்தகையதொரு நிலைமை, பணக்காரர்களைப் பொறுத்தவரையில் ஒரு "ஊழிக்காலம்"!
பின்வரும் தகவல்கள் நெதர்லாந்து பத்திரிகையான Trouw (6-1-2018)
இல் வெளியாகியுள்ளன. அவற்றை சுருக்கமாக மொழிபெயர்த்து தருகிறேன்.
அமெரிக்கப் பொருளாதாரம் பின்னோக்கிச் செல்வதுடன், அரசியல் குழப்பங்களுக்குள்ளும் சிக்கிக் கொண்டுள்ளது. கடும்போக்கு ஜனாதிபதி டிரம்பின் கொள்கைகளால் உலகில் புதிய யுத்தங்கள் தோன்றலாம். அதே நேரம் அமெரிக்காவிலும் உள்நாட்டுப் போர் நடக்கலாம். அப்படி எதுவும் நடக்காவிட்டாலும் மிகப் பெரிய சமூக- பொருளாதார மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். பல பணக்கார அமெரிக்கர்கள் நியூசிலாந்தில் வீடு வாங்கிக் குடியேறுவதற்கு இது தான் காரணம்.
அவர்கள் எதற்கு நியூசிலாந்தை தேர்ந்தெடுக்கிறார்கள்? பூகோள ரீதியாக எந்தவொரு உலக நாட்டுடனும் சேராமல் தனியே உள்ளது. ஆகையினால் அந்நிய சக்திகளால் இலகுவில் படையெடுக்க முடியாது. மேலும் அயலில் இருக்கும் அவுஸ்திரேலியாவுடன் ஒப்பிட்டால், பூர்வ குடிகளுடன் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சமாதானமாக வாழும் நாடு. அத்துடன் பயங்கரவாத தாக்குதல் குறித்த அச்சமும் இல்லை.
பிரபல அமெரிக்க சஞ்சிகையான The New Yorker, "ஊழிக்காலத்திற்கு தயாராகும் அமெரிக்கப் பணக்காரர்கள்" பற்றி, கடந்த வருடம் விரிவான கட்டுரை எழுதி இருந்தது. Silicon Valley முதலாளிகளும் நியூசிலாந்தில் குடியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
நியூசிலாந்தில் நிலங்களும், வீடுகளும் வாங்கிக் குடியேறும் அமெரிக்க பணக்காரர்களால் அந்நாட்டிலும் பிரச்சினை உருவாகியிள்ளது. வீட்டுமனை விலை உயர்ந்து கொண்டே செல்வதால் நியூசிலாந்து பிரஜைகளுக்கு வீடு வாங்கவோ, வாடகை கட்டவோ முடியாமல் உள்ளது. அதே நேரம் தொழிலாளர் வர்க்க குடியேறிகளின் எண்ணிக்கையும் கூடி வருவதால் அவர்களுக்கும் வீடு கிடைப்பதில்லை.
இதனால் அந்நியர்கள் வீடு வாங்க முடியாதவாறு அரசு புதிய சட்டம் போட்டுள்ளது. அது உள்நாட்டு வீட்டுப் பிரச்சினையை தீர்க்கும் என்று அரசு நியாயப் படுத்துகின்றது. இருப்பினும், அதற்கெதிரான விமர்சனங்களும் எழுகின்றன. வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசு புதிய வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று உள்நாட்டவர் விமர்சிக்கின்றனர். அமெரிக்கர்களோ "சுதந்திரம் கட்டுப்படுத்தப் படுவதாக" கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக