வியாழன், 15 பிப்ரவரி, 2018

நேர்பட பேசு : தி க அருள்மொழிடம் திராவிடம் படித்த பாஜக ராகவன்


Ganesh Babu :நேற்றைய 'நேர்பட பேசு' விவாதத்தின் ஒரு பகுதி இது. அப்பழுக்கற்ற திராவிட அறிவுக்கு முன்னால் ஆரியப் பொய்கள் எப்படி மண்டியிடும் என்பதை அறிந்துக்கொள்ள முழுவதும் படியுங்கள்.. 🔥🔥
பி.ஜே.பி ராகவன்: "பிறப்பினால யாருமே பிராமணன் கிடையாது. அதை புரிஞ்சிக்கோங்க"
வழக்கறிஞர் தோழர் Arulmozhi: "அப்ப நீங்க எனக்கு பதில் சொல்லுங்க.. பகவத் கீதையில கண்ணன் சொல்றாரு, 'சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்'(நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்). அதுக்கு அடுத்த வரியை படிச்சு பாருங்க. குணத்தினால்தான் ஒருவனுடைய குலம் அமைகிறது அப்படின்னா 'நான் வேறு தொழில் செய்யலாமா?' என்றுக் கேட்டால், 'செய்யக்கூடாது..நீ விரும்பினாலும் வேறு தொழில் செய்யக்கூடாது. பிறப்பினால் உனக்கு எந்தத் தொழில் சொல்லப்பட்டதோ, அதைத்தான் நீ செய்யவேண்டும்' என்கிறதுதானே பகவத் கீதை? நாங்க என்ன இனிமேலும் படிக்காமலேயே இருப்போம் அப்படின்னு நெனைச்சிக்கிட்டு இதையெல்லாம் சொல்றீங்களா?
ராகவன்: "தப..ப..ப.. ஹான்.. உங்க yardstickல போன கண்ணன் எந்தக் குலம்? எங்க நீங்க வேற?"
வழக்கறிஞர் அருள்மொழி: "பிரதமர் மோடி யார்? டாக்டர் தமிழிசை யார்?
அதாவது யார் இதை சொல்றாங்க அப்படிங்கிறதைவித, யார் எந்தத் தத்துவத்தை சொல்றாங்க என்பதுதான் முக்கியம். நீங்க யாரை வெச்சு பேச வைப்பீங்க அப்படிங்குறது எங்களுக்குத் தெரியும்.
நீதிபதி லோயாவுடைய மகன் சமீபத்துல பேட்டிக் கொடுத்தார் இல்லியா? 'அவரது சாவில் எங்களுக்கு சந்தேகமே கிடையாது. நாங்கதான் திரு.அமித் ஷாவை தொடர்புக்கொண்டு பத்திரிகை சந்திப்பு நடத்துறோம்'னு. சொன்னது செத்துப்போன நீதிபதியின் மகன். அதனால யாரை வைத்து எதை சொல்லனும் அப்படின்னு உங்களுக்குத் தெரியும். இதை செய்வதற்கு உங்களுக்கு மோடிகள் தேவை, கண்ணன்கள் தேவை!"
ராகவன்: "இந்த மாதிரி வாதங்கள்...." (ஏதோ சொல்லவந்தவர் தடுமாறுகிறார்)
வழக்கறிஞர் அருள்மொழி: "டாக்டர் அம்பேத்கர் உங்களுக்கெல்லாம் சேர்த்துதான் சொன்னார். 'அவர்களுக்கு ஒரு மகாபாரதம் தேவைப்பட்டது, ஒரு வியாசர் கிடைத்தார். அவர்களுக்கு ஒரு ராமாயணம் தேவைப்பட்டது, ஒரு வால்மீகி கிடைத்தார். அவர்களுக்கு ஒரு அரசியலமைப்பு சட்டம் தேவைப்பட்டது, நான் கிடைத்தேன்'னு. அதனால் உங்களுக்கு இதையெல்லாம் செய்வதற்கு எங்க ஆளுங்களே கிடைப்பாங்க"
ராகவன்: "உங்களுக்கு, உங்களுக்குனு யாரை சொல்றீங்க? காந்தி-நேருவை சொல்றீங்களா? ஹிஹி.."
வழக்கறிஞர் அருள்மொழி: (துளியும் பதற்றமின்றி, புன்னகை மாறாமல்) "சனாதனத்தை காப்பாற்ற நினைக்கும் சனாதனிகளுக்கு சொல்றேன். அது காந்தியாக இருந்தாலும் சரி, காந்தியைக் கொன்ற கோட்சேவாக இருந்தாலும் சரி. ரெண்டுப் பேருக்கும் இது பொருந்தும்"
ராகவன்: (சின்ன சங்கராச்சாரியாரைப் போல ஆழ்ந்த தியான நிலைக்கே சென்றுவிட்டார்)
-----------------------------------------------------------
இந்த விவாதத்தைப் பற்றி ஒரு பதிவுதான் எழுதவேண்டுமென்று நினைத்தேன். ஆனால் அதில் நம் வழக்கறிஞர் தோழர் அவர்கள் பேசிய கருத்துக்களைவிட நான் ஒன்றும் பெரிதாக எழுதிவிடப்போவதில்லை என்பதனால் அந்த விவாதத்தை அப்படியே தந்திருக்கிறேன்.
-Ganesh Babu

கருத்துகள் இல்லை: