ஞாயிறு, 29 அக்டோபர், 2017

ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்ய 4 டாக்டர்கள் ஏன் மறுத்தார்கள்? அம்பலமாகும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!

Venkat Ramanujam
 வக்கீல்: #கைரேகை பற்றி உங்களுக்குத் தெரியுமா?
Dr. பாலாஜி : ஆம் தெரியும். எனக்கு ரேகைகள் விஷயத்தில் அனுபவம் உள்ளது.
வக்கீல்: உயிரோடு இருப்பவர் வைக்கும் கைரேகையில் ரேகைகளின் ஓட்டத்தை எளிதாக பார்க்க முடியுமா?
Dr. பாலாஜி : ஆம். எளிதாக பார்க்கலாம்.
வக்கீல்: ஆனால் ஜெயலலிதா வேட்புமனு படிவங்களில் வைத்த கைரேகையில் இட்ஜஸ் எனப்படும் ரேகை ஓட்டம் தெளிவாக தெரியவில்லையே?
Dr. பாலாஜி : அதுபற்றி எனக்கு தெரியவில்லை.
************
வக்கீல்: ஜெயலலிதா நுரையீரல் செயல்பட முடியாத நிலையில் மிக மோசமான சுவாசக்கோளாறில் இருந்தாரா?’
Dr. பாலாஜி :ஆமாம். இருந்தார்.
வக்கீல்: இந்தப் பிரச்னைக்காக அவர் வெண்டிலேஷனில் வைக்கப்பட்டிருந்தாரா, சுவாசக் கோளாறுக்காக அவருக்கு தொண்டை துளை குழாய் அறுவை சிகிச்சையான டிரக்யாஸ்டமி செய்யப்பட்டிருந்ததா?
Dr. பாலாஜி :ஆம். வெண்டிலேஷனில்தான் வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு டிரக்யாஸ்டமி செய்யப்பட்டிருந்தது.

வக்கீல்: ஜெயலலிதாவின் கைரேகையை பதிவு செய்வதற்கு நான்கு அரசு மருத்துவர்கள் மறுத்த நிலையில்... நீங்கள் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதற்குக் காரணமே தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ஆக உங்களை நியமிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதுதான். அப்போது இருந்த தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவுடன் இதுபற்றி நீங்கள் ரகசிய உடன்பாடு ஏற்பட்ட பிறகுதான் கைரேகையை பதிவு செய்தீர்களா?
Dr. பாலாஜி : (குரல் கம்முகிறது )இ..... இல்லை......
*************
27-10-16 : டாக்டர் ஜெயலலிதாவிடம் கைநாட்டு வாங்கியதை சொல்கிறார் ..
27-10-17 : கோர்ட்டில் வைத்து கேள்விகளை கேக்க டாக்டர் திணறுகிறார் ., பம்முகிறார்

கருத்துகள் இல்லை: