வியாழன், 2 நவம்பர், 2017

BBC : இரட்டை குடியுரிமை .. இலங்கை பெண் எம்பி பதவி இழந்தார் .. முன்னாள் நடிகை கீதா குமாரசிங்கா

இலங்கையில் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளதன் காரணமாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார். இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய இரண்டு நாடுகளிலும் குடியுரிமை பெற்றுள்ள அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இவர் சுவிட்சர்லாந்திலும் குடியுரிமை பெற்றிருந்தமையால், இவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் கடந்த மே 3-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. வரலாற்றையே மாற்றிய ஒற்றைத் தாள் இந்த தீர்ப்புக்கு எதிராக அவரால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது உச்ச நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை உறுதிப்படுத்தியது. 2015-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காலி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி வேட்பாளராக போட்டியிட்டு இவர் தெரிவாகியிருந்தார்

கருத்துகள் இல்லை: