சனி, 2 செப்டம்பர், 2017

நாம் ஏன் நமது உரிமையை மத்திய அரசிடம் கொடுக்க வேண்டும்...


நீட் தேர்வால் விளைந்த பலன் இது தான். பல மோடி பக்தர்கள் நீட் தேர்வு ஏன் கண்டிப்பாக வேண்டும் என்று கட்டுரைகள் எழுதினார்கள். ஆனால் ஒன்றை சவுகரியமாக மறந்து விட்டார்கள். தமிழகத்தில் 90 சதவீத மாணவர்கள் ஸ்டேட் போர்டில் தான் படிக்கிறார்கள். ரெண்டு சதவீத சென்ட்ரல் போர்டு மாணவர்களின் பாடத்திற்கு ஏற்ப, தொண்ணூறு சதவீத மாணவர்களையும் தயார் செய்ய சொல்வது எந்த விதத்தில் நியாயம்? நீட் தேர்வால், பிரைவேட் கல்லூரிகளின் டொனேஷன் பணம் ஒன்றும் குறையவில்லை. இன்னும் அதிகம் தான் ஆகி உள்ளது என்று இது சம்பந்தப்பட்டவர்கள் கூறுகிறார்கள். மெடிக்கல் டூரிசம் என்று இந்தியாவை அழைக்கிறார்கள். அதற்கு காரணம் சென்னை தான். இந்தியா அல்ல. இந்த பாழாய் போன தமிழ்நாட்டு ஸ்டேட் போர்டில் படித்த மஹா மண்டு மாணவர்கள் தான் இந்தியாவிலேயே சிறந்த டாக்டர்களாக உள்ளார்கள். வெளிநாட்டுக்காரர்கள் கூட, சென்னைக்கு வந்து தான் இதய சிகிச்சை செய்து கொள்கிறார்கள்.மோடி ஆண்ட குஜராத்திற்கு சென்று யாரும் சிகிச்சை செய்து கொள்வதில்லை. அதனால் முதலில் நமது வலிமையின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். நமது தமிழ்நாட்டு பாடத்திட்டங்களை சீரமைத்திட சொல்லுங்கள். அதற்காக, அதை மத்திய அரசிடம் அந்த உரிமையை விட்டு கொடுக்க சொல்லாதீர்கள். நமது ஸ்டேட் போர்டில் படித்த மாணவர்களை, எப்படி மேலும் திறமையாக்குவது என்பது நமது கடமை. அதை நாம் மத்திய அரசிற்கு கொடுக்க முடியாது. இது மாநில அரசின் உரிமை. நீட் தேர்வு செய்து தான், தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கட்டளை இடுவது, மாநில அரசின் உரிமையை பறிப்பதே. ஏனனில், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஒட்டுமொத்த மத்திய அரசின் செயல்பாடு, மாநில அரசை விட கேவலமாக உள்ளது. பல மாநில அரசுகள் தமிழ்நாட்டை விட மேம்பட்டதாகவும் உள்ளது.
நமது கடமையை நாம் அடுத்தவரிடம் தள்ளிவிட முடியாது. அடுத்தவரை விட, நாம் நன்றாக செய்ய முடியும் எனும்போது, நாம் ஏன் நமது உரிமையை மத்திய அரசிடம் கொடுக்க வேண்டும். வெறும் ரெண்டு சதவீத மாணவர்களை கொண்டுள்ள மத்திய அரசு, மிச்சமுள்ளவர்களை கண்டுகொள்ளவில்லை. அதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்கவும் இல்லை. அதைப்பற்றி அது கவலைப்படவும் இல்லை. இப்படிப்பட்ட ஏழை கிராம புற மாணவர்களை பற்றி சிந்திக்காத மத்திய அரசு எப்படி திறம்பட சிந்திக்க முடியும்?  தினமலர் வாசகர் அன்பு . தஞ்சை

கருத்துகள் இல்லை: