புதன், 30 ஆகஸ்ட், 2017

வந்த கறுப்புப் பணம் 16000 கோடி ரூபாய். புதிய ரூபாய் அடிக்க செலவு 21000கோடி ரூபாய்.

donashok : டீமானடைசேஷனால் கைப்பற்றப்பட்ட கறுப்புப் பணம் 16000கோடி ரூபாய்.
புதிய ரூபாய் தாள்களை அடிக்க ஆன செலவு 21000கோடி ரூபாய்.
அரசுக்கு நஷ்டம் 5000 கோடி ரூபாய்.
இழந்த உயிர்களின் எண்ணிக்கை 100+.
மொத்த நாடும் பிழைப்பை விட்டுவிட்டு வங்கியில வரிசையில் நின்றதால் இழந்த Manhours பல கோடி மணிநேரம்.
பலகோடி மணிநேர Manhours இழப்பால் பொருளாதார சேதம் பல்லாயிரம் கோடி ரூபாய்.
இந்தியாவின் GDP வரலாறு காணாத வீழ்ச்சி.
2017ஆம் ஆண்டின் முதல்பாதியில் மட்டும் பத்து லட்சம் வேலைகள் இழப்பு.
ஆகமொத்தம் டீமானடைசேஷன் என்ற மோடியின் அறிவிப்பு ஒரு கண்ணுக்கு தெரியாத சுனாமி. சுனாமி எப்படி வாழ்க்கை முழுதும் சேர்த்து வைத்ததை எல்லாம் ஒரேநாளில் வாரிச்சுருட்டிக் கொண்டு போகுமோ, அப்படித்தான் இந்தியாவின் பொருளாதாரத்தையும், பலகோடி இந்திய இளைஞர்களின் வருங்காலத்தையும் வாரிச்சுருட்டிக் கொண்டு போயிருக்கிறது மோடியின் டீமானடைசேஷன்.

நாட்டை நாசமாக்கிய இந்த வேலையை செய்தவர்கள் தங்களை தேசபக்தர்கள் என சொல்லிக்கொள்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?
மோடியை ஆதரிக்கும் கார்ப்பரேட் மற்றும் உயர்சாதி ஆட்கள் மேல் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. அவர் அவர்களுக்காகத் தான் ஆட்சி நடத்துகிறார். ஆனால் மோடியை மதத்திற்காக ஆதரிக்கும் மேல் நடுத்தர, நடுத்தர, கீழ்நடுத்தர மற்றும் ஏழை மக்களே, பசி வந்தால் பகவத்கீதையை பொங்கித்திங்க முடியாது. அந்த நிலைக்குதான் மோடி நம்மை தள்ளிக் கொண்டிருக்கிறார்.
-டான் அசோக்

கருத்துகள் இல்லை: