புதன், 30 ஆகஸ்ட், 2017

1000 ரூபாய் நோட்டுகள் 99 சதவீதம் திரும்பிவிட்டது: ரிசர்வ் வங்கி அறிக்கை ..


பண மதிப்பிழப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையால் 1000 ரூபாய் நோட்டுகளில் 99 சதவீதம் திரும்பி வந்துவிட்டது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின் சாராம்சம் வருமாறு:- கருப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, புழக்கத்தில் உள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள மத்திய அரசு அவகாசம் அளித்தது. பழைய 500 ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டு, புதிய 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. ஆனால், 1000 ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டு, அவை மீண்டும் அச்சிடப்படவில்லை. அதற்கு பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அசசடித்து விநியோகம் செய்யப்பட்டன. அதன்படி, மொத்தமுள்ள 632.6 கோடி மதிப்பிலான 1000 ரூபாய் நோட்டுகளில் 8.9 கோடி ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பி வரவில்லை. அதாவது, 1.4 சதவீதம் 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பவில்லை.


இதேபோல், மார்ச் 2017 வரையில் 588.2 கோடி ரூபாய்க்கு புதிய மற்றும் பழைய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்துள்ளது. ஆனால், கடந்த நிதியாண்டில் 1,570.7 கோடி மதிப்பில் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்ட வகையில் 3,421 கோடி ரூபாய் செலவானது. இந்த நிதியாண்டில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க 7,965 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இந்த ஆண்டில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் செலவு மட்டும் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மாலைமலர்

கருத்துகள் இல்லை: