வியாழன், 31 ஆகஸ்ட், 2017

BJP யின் வியாபம் ஊழலின் பெரும்பகுதி மருத்துவ நுழைவுத்தேர்வை ஒட்டியது

BJP எந்தளவுக்கு ஊழலுக்கு எதிரான கட்சினா.... வியாபம் ஊழலை வெளிக்கொணர்ந்த Whistleblower Ashish Chaturvedi ஒரு RSS காரர். அதாவது முன்னாள் RSS ஆள். ஊழலை ஒழிக்கக் கிளம்பி RSS-ல் இணைந்தவர், இந்த ஊழலில் RSS-ன் கை இருப்பதை அறிந்து அதிர்ந்து(!) பின்பு விலகியுள்ளார். அந்த ஊழலில் தொடர்புடைய 36 பேர் மர்மமான முறையில் இறந்தார்கள். ஆஷிஷ் உயிரை தவிர அனைத்தையும் இழந்துள்ளார். நண்பர்கள் யாருமில்லை. அவருடனோ அவரது குடும்பத்தினருடனோ யாரும் பேசுவதில்லை. தான் குளிப்பதை கூட போலீஸ் வீடியோவில் பதிவு செய்வதாக சொல்கிறார் ஆஷிஷ்.
போலீஸ் பாதுகாப்பில் இருக்கும்போதே இதுவரை சுமார் 16 முறை தாக்கப்பட்டுள்ளார். புகார் அளித்தால் சாட்சி சொல்ல பாதுகாப்பு காவலரே வரவில்லை. பல முறை மிரட்டப்பட்டுள்ளார். மிரட்டியவர்கள் கூலிப்படைகள் இல்லை. IAS & IPS வாலாக்கள்.
வியாபம் ஊழலின் பெரும்பகுதி மருத்துவ நுழைவுத்தேர்வை ஒட்டியது என்பதால், வியாபம் ஊழலை தமிழ்நாட்டிலும் நிகழ்த்த NEET வழிவகுக்கும் என்பது என் கணிப்பு. நீட் விவகாரத்தில் வியாபம் ஊழலை தமிழ்நாட்டில் பலரும் பேசாதது ஆச்சர்யமளிக்கிறது.

பிஜேபி தன்னை ஊழலுக்கு எதிரான கட்சியாக பிரச்சாரப்படுத்தி மிடில் கிளாஸை நம்ப வைக்கும் ஒரே காரணி காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்கள் மட்டும்தான். காங்கிரஸாவது ஊழலோடு நின்றது. இவர்களை அதைத் தாண்டி கொலைகளில் நிற்கிறார்கள். லட்சம் கோடி ஊழலை விட அபாயமானது ஊழலுக்காக கொலைகள் செய்வது.
By Muthu Ram

கருத்துகள் இல்லை: