வெள்ளி, 1 செப்டம்பர், 2017

திருமாவளவன் பிரகடனம் : மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான யுத்தமே அனிதாவின் மரணம்

Mayura Akilan o Oneindia Tamil மதுரை: மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான யுத்தமே
அனிதாவின் மரணம் என்று குற்றம் சாட்டியுள்ள திருமாவளவன், அனைத்து ஜனநாயக சக்திகளும் மாணவர்களும் அணி திரள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.  மாணவி அனிதாவின் மரணம் பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இது குறித்து அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலையும் அரசுக்கு எதிராக கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தொல். திருமாவளவன், மத்திய அரசின் நடவடிக்கை, மாநில அரசின் மெத்தனமே அனிதாவின் மரணத்திற்குக் காரணம் என்று குற்றம் சாட்டினார்.
மாணவர்கள் யாரும் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். அகில இந்திய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான யுத்தமே அனிதாவின் மரணத்திற்குக் காரணம். அரசுகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் மாணவர்களும் அணி திரள வேண்டும் என்று திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். அனிதா குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். tamiloneindia

கருத்துகள் இல்லை: