தினேஷ் ராமையா:
தி.மு.க. தலைவர் கருணாநிதியை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
தா.பாண்டியன் மற்றும் முத்தரசன் ஆகியோர் இன்று நேரில் சந்தித்து நலம்
விசாரித்தனர்.
உடல்நலக் குறைவால் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைக் கடந்த 8
மாதங்களுக்கு மேலாக கருணாநிதி தவிர்த்து வருகிறார். நோய்த்தொற்று மற்றும்
சளித் தொந்தரவால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு கோபாலபுரம் இல்லத்தில்
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் நலன் ஒத்துழைக்காத காரணத்தால்
சமீபத்தில் நடந்த முரசொலி பவள விழாவில் அவரால் கலந்துகொள்ள இயலவில்லை.
ஓய்வில் இருக்கும் அவரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் அவரை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில், கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்ற தா.பாண்டியன் மற்றும் முத்தரசன் ஆகியோர் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்த சந்திப்பின்போது மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
vikatan.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக