சனி, 22 ஜூலை, 2017

திருமாவளவன் அழைப்பு ! நீட் நுழைவு தேர்வுக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம்!

நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு
மனித சங்கிலி போராட்டத்தை வெற்றிபெறச் செய்வோம்
தொல்.திருமாவளவன் அழைப்பு
~~~~~~~~~~~~~
நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்கக் கோரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி 27 ஆம் தேதி மாலை திமுக நடத்தும் மனித சங்கிலிப் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளும் பங்கேற்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். மாவட்டத் தலைநகரங்களில் திரளாகப் பங்கேற்று இந்தப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்யுமாறு பொதுமக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கிறோம்.
Ravindran Krishnamurthy இனி தமிழக கல்லூரிகள் அனைத்திலும் தகுதி திறமை என்ற போர்வையில் இதர மாநிலத்தவரின் ஆதிக்கம் கொடி கட்டப் போகின்றது. கல்வி வியாபாரிகளும் இதைப் பற்ற்யெல்லாம் சிறிதும் கவலைப்பட போவதில்லை. அடிமைகளைப் பற்றி கேட்கவேவேண்டாம்.

இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகக் கல்வியை மத்திய அரசின் முழுமையான பிடிக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் நீட் நுழைவுத் தேர்வு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள்ளது. அந்தத் தேர்வு மத்திய கல்வி வாரியப் பாடத்திட்டத்தின் (சிபிஎஸ்இ) அடிப்படையில் அமைந்துள்ளதால் வேறு பாடத்த் திட்டங்களைப் பயிலும் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையான பாதிப்புக்கு
ஆளாகியுள்ளனர்.
எனவே, நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் விதமாகத் தமிழக சட்டப்பேரவையில் இரண்டு சட்ட மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பட்டது. ஆனால் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அந்த மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமால் பல மாதங்களாக கிடப்பில் போட்டு வைத்துள்ளது. உடனடியாக அந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் நுழைவு தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டு மாணவர்களை வஞ்சிக்கும் விதமாக இதில் மெத்தனம் காட்டி வருகிறது. மத்திய அரசின் அலட்சியப் போக்கிற்கு மாநில அரசும் உடந்தையாக உள்ளது.
தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும் எதிர்வரும் 27.7.2017 வியாழக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அறவழியிலான மனித சங்கிலி போராட்டத்தை நடத்துவதற்கு அனைத்து கட்சிகளுக்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது. அந்த அழைப்பை ஏற்று 27 ஆம் தேதி கடலூரில் நடக்கும் மனித சங்கிலி போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழக மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று ’நீட்’ தேர்வு தொடர்பான தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவண்,
தொல்.திருமாவளவன்.

கருத்துகள் இல்லை: