புதன், 19 ஜூலை, 2017

மோடியின் கூட்டாளிகளுக்கு செல்லும் மக்கள் பணம்.

visil.in/ ஜோதிமணி ,:  காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு செய்தித் தொடர்பாளர். மோடி அரசு சத்தமில்லாமல் அதானி மின்சார நிறுவனம் 500கோடி ரூபாய் பயன்பெறும் வகையில் சிறப்பு பொருளாதார மண்டலம் தொடர்பான விதிகளை மாற்றியமைத்துள்ளது.
மேலும் அதானி குழுமத்தின் 1000கோடி ரூபாய் வரி ஏய்ப்பையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
இந்த இரண்டு கட்டுரைகளையும் புகழ்பெற்ற பொருளாதார அரசியல் வார இதழ் வெளியிட்டிருந்தது.
இதையொட்டி அந்த கட்டுரை பிரசுரத்திலிருந்து எடுக்கப்பட்டதோடு அதன் ஆசிரியரும் ராஜினமா செய்துள்ளார்.
முதலில் அதானிக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் சதுர அடி ஒரு ரூபாய்க்கு மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது வழங்கபட்டது.
அதை அவர் 8000ரூபாய்க்கு எட்டே மாதத்தில் விற்றார். இதில் 25000கோடி ஊழல் என்று சிஏஜி குறிப்பிட்டுள்ளது.
இதுபோல பல சலுகைகளை குஜராத் அரசு அவருக்கு வழங்கியது. அதானியின் தனி விமானத்தில் மோடி பறந்ததும், ஆயிரக்கணக்கான கோடிகள் தேர்தலில் இறைக்கப்பட்டதும் எல்லோரும் அறிந்த கதை தான்.
இந்த குஜராத் மாடல் ,மோடி பிரதமரானதும் இந்திய மாடலாக விரிவுபடுத்தப் பட்டது.
ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள்.அதானி,பாபா ராம் தேவ் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
உலகமே தேறாது என்று கைவிட்ட ஆஸ்திரேலியா சுரங்கத்திற்காக மோடியே முன்நின்று அதானிக்கு 60,000ரூபாய் மக்கள் பணத்தை ஸ்டேட் பேங்க் வழங்க ஆவண செய்தார். மக்களின் எதிர்ப்பால் பிறகு இது கைவிடப்பட்டது.

மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் அவர் தங்கும் ப்ளோரிலேயே மக்கள் வரிப்பணத்தில் தங்கும் சலுகை அதானிக்கு வழங்கப்பட்டு, பல்லாயிரம் கோடிகள் பெறுமானமுள்ள பல டீல்கள் பெற்றுத்தரப்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்துவருகின்றன.
மோடி பிரதமரான முதல் வருடத்திலேயே அதானி இந்தியாவின் மூன்றாவது பெரிய பணக்காரர் ஆகிவிட்டார்.
அடுத்து அம்பானிக்காக ஜியோ விளம்பரத் தூதுவரானார் மோடி. ஜியோ விதிமீறல் தொடர்பாக மற்ற நிறுவனங்கள் ட்ராயிடம் செய்த முறையீடுகள் கிடப்பில் போடப்பட்டன.
ராணுவ தளவாடங்கள் தொழிலில் முன் அனுபவம் இல்லாத அனில் அம்பானி நிறுவனத்திற்கு போர் விமானங்கள் வாங்க டெண்டர்தரப்பட்டது.
முந்தைய காங்கிரஸ் அரசு செய்த ஒப்பந்தத்தை விட பலமடங்கு அதிக விலைக்கு அதே விமானங்கள் வாங்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதில் இல்லை.
ஊடகங்கள் அதை கேள்வி கேட்கக் கூட அஞ்சி நடுங்குகின்றன.
பாபா ராம்தேவின் சாம்ராஜ்யம் மோடி அரசில் எப்படி விரிவடைந்திருக்கிறது என்பது நாம் அறிந்ததுதான்.
அடுத்து டிஜிடல் பரிவர்த்தனை என்று சொல்லி பேடிஎம் விளம்பரத் தூதர் ஆனார் மோடி. அடுத்த ஒரு மாதத்தில் அதன் பங்குதாரர் 85 கோடிக்கு டெல்லியில் மிகப்பெரிய பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் இடத்தில் வீடு வாங்கினார்
இந்த ஆயிரக்கணக்கான கோடிகள் கார்ப்பரேட் ஊழல்களை மறைக்கத்தான் பத்திரிக்கைகள் மிரட்டப்படுகின்றன.
தகவல் அறியும் உரிமை சட்டம்,ஊழல் கண்காணிப்பு ஆணையம்,லோக் பால் போன்ற காங்கிரஸ் அரசு கொண்டுவந்த, ஊழலை வெளிக்கொணரும் அமைப்புகள் ஒழிக்கப்படுகின்றன.
ஆயிரக்கணக்கான கோடிகள் ஊழல் நடக்கும். ஆனால் வெளியில் வராது
இதுதான் மோடியின் #புதியஇந்தியா!

கருத்துகள் இல்லை: