சனி, 22 ஜூலை, 2017

தமிழிசை சவுந்தரராஜன் :நீட் தேர்வு எழுத தமிழக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்

நீட் தேர்வு எழுத தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டுமென தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தியாகராயநகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்தது. இதில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றுப் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''நீட் விவகாரத்தில் ஓராண்டு கால அவகாசம் அளித்தும் தமிழக அரசு ஏதும் செய்யவில்லை. நீட் நுழைவுத் தேர்வு எழுத அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். பெட்ரோல் மற்றும் மதுபானங்களுக்கு விரைவில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.
நடிகர் கமல் தீர்க்கமாக முடிவு எடுத்துவிட்டு அரசியலுக்குள் வர வேண்டும். உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். சர்வதேச சட்டப்படியே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்கிறது. இலங்கை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 100 படகுகளை மீட்க அரசு முயற்சித்து வருகிறது'' என்றார்tamilhehindu

கருத்துகள் இல்லை: