சனி, 22 ஜூலை, 2017

மக்களை சுரண்டியே பேரரசுகள் உருவாகின .. ராஜ ராஜ சோழன்

Jagapriyan Somasundaram: தேவதாசி கலாசாரம் மிகவும் பழமையானது. சங்கமருவிய காலத்திலெழுந்த சிலப்பதிகாரத்தில் கூட மாதவி என்ற பாத்திரம் வருகின்றது.பண்டைய இந்திய இலக்கியங்களில் கூட இது பற்றிய தகவல்கள் நிறைய வருகின்றன. பல்லவர் கால பக்தியிலக்கிய கால கட்டத்தில் இந்து மதம் மீண்டும் செல்வாக்குடைய மதமாக வளர்ந்தது. சோழர் ஆட்சிக்காலத்தில் அது பெரிய வல்லரசாக வளர்ந்ததனால் நிறைய செல்வம் குவிந்தது. அது சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடையே அதிகம் சேர்ந்தது. அவர்களின் லௌகிக வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட கோவில்கள் உதவின. மதத்தின் பெயரை வைத்து எல்லாவிதமான சலுகைகளையும் அனுபவித்தனர். அந்த வகையில் தேவதாசி முறைமையிலும் இந்தக்கால கட்டத்தில் பெரியதொரு வளர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. பண்டைய உலகில் ஆட்சி உரிமை என்பது பிறப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டது. அரசர்கள் மிகவும் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டு அவர்களின் தனிப்பட்ட ஒழுக்கக்கேடுகள் கூட மிகவும் உயர்வானவையாக பேசப்பட்டன.
அரசன் உலா வரும்போது ஏழு பருவ பெண்களும் காதல் கொள்வதை வர்ணித்து உலா என்னும் இலக்கிய மரபே உருவாகியும் இருந்தது. இந்த அரசர்களை பிரதி பலிக்கும் வகையிலேயே பண்டைய மதங்களில் தெய்வங்களையும் உருவாக்கினார்கள்.உழைக்கும் மக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட சுரண்டலின் அடிப்படையிலேயே எல்லாப்பண்டைய பேரரசுகளும் கட்டப்பட்டன. அவற்றை பொற் காலம் என வர்ணிக்கும் சரித்திர ஆசிரியர்கள் இன்றும் உள்ளனர்.

கருத்துகள் இல்லை: