வியாழன், 20 ஜூலை, 2017

14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்வு: 24ம் தேதி பதவியேற்பு

இந்திய ஜனாதிபதியாக இருக்கும் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அவருக்கு பதிலாக புதிய ஜனாதி பதியை தேர்ந்து எடுக்க ஜூலை 17-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார். இதையடுத்து நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 24ஆம் தேதி குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்கிறார்.

 71 வயதான ராம்நாத் கோவிந்த் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தலித் தலைவர் ஆவார். வக்கீலான இவர் பாரதீய ஜனதா சார்பில் இரு முறை டெல்லி மேல்-சபை உறுப்பினராக பதவி வகித்து இருக்கிறார். அமித்ஷாவுக்கு மிகவும் நெருக்கமானவர். கே.ஆர்.நாராயணனுக்கு பிறகு 2-வது தலித் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றார்.
 ராம்நாத் கோவிந்த் 7,02,044 (522 எம்பிக்கள் (3,69,576)) மீராகுமார் 3,67,314 (225 எம்பிக்கள் (1,59,300)) குஜராத், மகாராஷ்டிரா போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் ராம்நாத் கோவிந்த்துக்கு வாக்குகள் கிடைத்துள்ளன. டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் சிலரும், உத்திரப்பிரதேச எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சிலரும் ராம்நாத் கோவிந்த்துக்கு வாக்களித்துள்ளனர்.  நக்கீரன்

கருத்துகள் இல்லை: