மே 30 ஆம் தேதி, தமிழகம் முழுவதுமுள்ள ஓட்டல்கள் மூடப்படும்' என்று
தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத் தலைவர் வெங்கடசுப்பு தெரிவித்துள்ளார்.
ஜூன் 1ஆம் தேதியிலிருந்து ஜி.எஸ்.டி வரி விதிப்புமுறை அமல்படுத்தப்படும் என
மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பின்மூலம் விலைவாசி
முறையில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட உள்ளன. குறிப்பாக, உணவகங்களில் உணவு
விலைகள் அதிகமாக உயரும் நிலை உள்ளது. ஏ.சி-யுடன் கூடிய உணவகங்கள் விலைகள்
அதிகப்படியாக உயரும். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு
ஓட்டல்கள் சங்கத் தலைவர் வெங்கட சுப்பு, 'ஜி.எஸ்.டி வரி விதிப்பினால்
உணவுகளின் விலை கடுமையாக உயரும். எனவே, மத்திய அரசு இதுகுறித்து
கருத்தில்கொள்ள வேண்டும். ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிராக மே-30ஆம் தேதி
மாநிலம் முழுவதும் கடை அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. அதன்பிறகு,
ஜூன் 3ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் ஆலோசித்து, தொடர் போராட்டம்
நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்' என்றார்.விகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக