திங்கள், 22 மே, 2017

விரைவில் ஆட்சி மாற்றம்: மைத்ரேயன் (RSS ஸ்லீப்பர் செல் கூறுவதால் கண்டிப்பாக நடக்கும்)

விரைவில் ஆட்சி மாற்றம்: மைத்ரேயன்மின்னம்பலம் :தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆவார்’ என மைத்ரேயன் கூறியுள்ளார்.
அதிமுக-வின் இரு அணிகளும் இணைய பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கப்பட்டும், இதுவரை ஒருமுறைகூட பேச்சுவார்த்தை நடக்கவில்லை. இரு அணிகளின் தலைவர்களும் எதிரும் புதிருமான கருத்துகளைத் தெரிவித்து மோதி வருகின்றனர். இதனால் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. இரண்டு நிபந்தனைகளை முன்வைத்துள்ள ஓ.பி.எஸ். அணியினர் அதிலிருந்து பின்வாங்க போவதில்லை என்று கூறியுள்ளனர். ‘இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் அணிகள் இணைய எந்தத் தடையும் இல்லை’ என மே 20ஆம் தேதி ஓ.பி.எஸ். அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘ஜெயலலிதாவின் கனவு நிறைவேற பிரிந்தவர்கள் திரும்பி வர வேண்டும்’ என கேட்டுக்கொண்டார். பிரதமரைச் சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்துள்ள பன்னீர்செல்வம், ‘உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு பாஜக-வுடனான கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்’ என ட்வீட் செய்திருந்தார். பின்னர், ‘எந்தக் கட்சியாக இருந்தாலும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு கூட்டணி பற்றி முடிவு எடுக்கப்படும்’ என மற்றொரு ட்வீட் செய்திருந்தார்.

தற்போது, பன்னீர்செல்வத்துடன் பிரதமரைச் சந்திக்க நாடாளுமன்ற உறுப்பினரான மைத்ரேயனும் டெல்லிக்குச் சென்றிருந்தார். அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “தமிழ்நாட்டில் தற்போது செயல்படாத அரசாங்கம் உள்ளது. இந்த அரசிடம் இருந்து நல்லாட்சியை எதிர்பார்க்க முடியாது. ஆகையால், விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். பன்னீர்செல்வத்தின் தலைமையிலான புதிய அரசு அமையும்” என அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: