வெள்ளி, 26 மே, 2017

வீட்டுக் கூரையின் மீது விழுந்த ஏலியன்ஸ் குட்டிகள்!? கரூரில் பரபரப்பு!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள லாலாபேட்டையில் அண்மையில் மழை பெய்தது. அப்போது வீட்டு கூரையின் மீது “தொப், தொப்” என்று ஏதோ பொருள் விழும் சத்தம் கேட்டுள்ளது. ஆழங்கட்டி மழை என நினைத்துள்ளனர். வெளியே சென்று பார்த்த போது, ஒரு சிறிய உருவம் நீரில் மிதந்து சென்றுள்ளது. தலைப்பகுதி பெரிதாகவும், உடல் பகுதி முழுவதும் ஒல்லியாக வால் போன்றும் இருந்திருக்கின்றது. அந்த உயிரினம் வானத்தில் இருந்து தான் விழுகிறதா என பார்த்துள்ளனர். அதுவும் உறுதியானது. வானத்தில் இருந்து தான் விழுந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பக்கத்தில் போக பயந்துள்ளனர். இ
தனையடுத்து மழை நின்றபிறகு பக்கத்தில் போய் பார்த்துள்ளனர். அது என்ன உயிரினம் என்றே தெரியவில்லை. இதனால் அவை ஏலியன்ஸ் என கதை கட்டி விட்டுள்ளனர். பொதுவாக, கடல் பகுதியில் புயல் காற்று உருவாகும் போது, கடலில் உள்ள மீன், தவளை போன்ற உயிர்களை சுருட்டிக் கொண்டு சென்று விடுமாம். பின்னர் அவை மேகத்தில் உயிர் வாழுமாம். பின்னர் அவை மழை பெய்யும் போது, மக்கள் வாழும் பகுதிகளில் விழுமாம். இப்படி பல நாடுகளில் மீன் மழை பெய்துள்ளது. ஆனால் கரூரில் வானத்தில் இருந்து விழுந்த உயிரினம் ஏதேனும் கடல் வாழ் உயிரினமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. லைவ்டே


கருத்துகள் இல்லை: