வியாழன், 25 மே, 2017

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி : தனியார் பாலில் இரசாயன கலப்படம் ... பேரம் படியல்லையோ?

பாலில் கலப்படம் செய்யப்படவில்லை என்பதை தனியார் நிறுவனங்கள் நிரூபிக்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சவால் விடுத்துள்ளார்.;தனியார் பால் நிறுவனம் ஒன்றின் பாலில் ரசாயனம் கலந்திருப்பதாக
நேற்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்புப் புகாரை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தெரிவித்தார். இதையடுத்து,  'பொதுமக்கள் குடிக்கும் பாலில் யாராவது கலப்படம் செய்வது தெரியவந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும், கலப்படம் செய்ததாகப் புகார் கூறப்பட்ட பால் மாதிரி புனேவில் இருக்கும் ஆய்வகத்துக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. முடிவுகள் வந்தவுடன் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அவர் கூறினார். ஆறு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அரசு இன்று திடீர் என்று இப்போ ஒரே அடியாக தனியார் பால் பலசமயங்களில் முழுக்க முழுக்க இராசாயன பால்தான் என்று கூறப்படுவது நிச்சயம் கண்டிக்க தக்கது .. இன்று வரை ஒழுங்காக வந்து சேர்ந்த மாமூல் தற்போது வரவில்லையா? ஆட்சி தள்ளாடி கொண்டிருக்கும் போது பேரம் பேசுவது கடினம்தான் ?

இந்நிலையில் இன்று தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்யப்படவில்லை என்று நிரூபிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, 'பாலில் ரசாயனம் கலப்பதை தனியார் நிறுவனங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். பெருவாரியான தனியார் நிறுவனங்கள் பால் கெட்டுப்போகாமல் இருக்க ரசாயனம் கலக்கிறார்கள். கெட்டுப்போனால்தான் பால், இல்லையேல் அது ரசாயனம்' என அவர் கூறியுள்ளார். மேலும் தனியார் பால் பாக்கெட்டுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுவருகிறது. தவறு கண்டுபிடிக்கப்பட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர் எச்சரித்துள்ளார் விகடன்

கருத்துகள் இல்லை: