சென்னை: நாய்க்கு பிரியாணி கொடுத்த காரணத்திற்காக ஆட்டோ டிரைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை
பெரம்பூர் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் விஜய். ஆட்டோ டிரைவரான இவர்
அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு உணவளிப்பதை வழக்கமாக
கொண்டுள்ளார். இவரைப் போலவே பெரம்பூரில் பிளாட்பார்மில் வசித்து வரும்
வெள்ளை பிரபு என்பவரும் நாய்களுக்கு தினமும் உணவு வழங்கி வந்துள்ளார்.
இந்நிலையில்
சில நாட்களுக்கு முன்னர், இவர்கள் இருவரும் உணவளிக்கும் நாய் ஒன்று குட்டி
போட்டுள்ளது. அந்த குட்டிகளில் அழகாக இருந்த ஒரு நாய்க்குட்டியை விஜய்
தனது வீட்டிக்கு தூக்கிச் சென்றுள்ளார். பின்னர் நேற்று அதே இடத்தில் அந்த
நாய்க்குட்டியை விஜய் விட்டுள்ளார்.மேலும் தான் வாங்கி வந்த பிரியாணியை அங்கிருந்த நாய்களுக்கு அளித்துள்ளார். அந்த நாய்க்கும் பிரியாணி கொடுத்துள்ளார். இதைப்பார்த்த வெள்ளை பிரபு, தனது நாய்க்கு சைவம் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று கூறி விஜய்யுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற வெள்ளை பிரவு விஜய்-யின் தலையில் இரும்புக் கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த விஜய், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து வந்த ஐசிஎஃப் மற்றும் ஓட்டேரி போலீசார், இந்த பகுதி தங்கள் எல்லையில் வராது என்று கூறி வழக்கு பதிவு செய்யாமல் நேரம் கடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் வெகு நேரமாக விஜய் சடலம் பிளாட்பாரத்திலே கிடந்துள்ளது. பின்னர் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி கூறியதால் விஜயின் உடலை கைப்பற்றிய ஐ.சி.எஃப் போலீசார், வெள்ளை பிரபுவை கைது செய்துள்ளனர். tamiloneindia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக