புதன், 1 மார்ச், 2017

உள்ளாட்சி தேர்தலில் திமுக மாவட்ட செயலர்களே காங்கிரசுக்கு இடங்களை தேர்வு ...

'உள்ளாட்சி தேர்தலில், காங்கிரசுக்கான இடங்களை, மாவட்ட அளவில் முடிவு செய்து கொள்ளுங்கள்' என, தி.மு.க., மாவட்ட செயல ருக்கு, ஸ்டாலின் பச்சைக் கொடி காட்டி உள்ளார். தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில், அக்கட்சி யின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அதில், அவர் பேசியது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல், தடை ஏற்படுத்து வதற்கு, ஆளுங் கட்சி தரப்பில், பல்வேறு வியூகங்கள் அமைக் கப்பட்டு வருகின்றன. அவற்றை, நீதிமன்றம் வாயிலாக நாம் முறியடிப்போம். உள்ளாட்சி தேர்தலில், மாவட்ட அளவில், காங்கிரசுக்கான இட ஒதுக்கீட்டை முடிவு செய்து கொள்ளுங்கள். அந்த கட்சிக்கு, எங்கெங்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ, அங்கு மட்டும் இடம் ஒதுக்குங்கள். இத்தனை சதவீதம் என்ற கணக்கு எல்லாம், பார்க்க வேண்டாம். திருநாவுக்கரசரின்  அதிமுக பாசத்தால் வந்த வினை? 
மாவட்ட செயலர்களால் பேசி தீர்க்க முடியாத இடங்களை மட்டும்,என் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். தலைமை நிலைய நிர்வாகிகள் பேச்சு நடத்தி, சுமுக முடிவு காண்பர்.சமூக வலைதளங் களை, அனைவரும் பயன்படுத்த வேண்டும். மாவட்ட செயலர்களுக்கு தனியாக, 'வாட்ஸ் ஆப்' குழு உருவாக்கப்படும்; அதன் மூலம், என்னுடைய தரப்பு தகவல்கள், உங்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும்.

மத்திய அரசு, மானியத்தை ரத்து செய்துள்ளதால், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை. அதனால், ரேஷன் கடைகள் முன் போராட்டம் நடத்துங்கள். 'நமக்கு நாமே' பயணத்தை, மீண்டும் நடத்துவது, தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இயலாது. எனவே, மாவட்ட செயலர்கள் எல்லாரும், பொதுமக்கள், விவசாயி களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்யுங்கள்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மாவட்ட செயலர்கள் பேசியதாவது:

சென்னைக்கு அருகே, கூவத்துாரில் ஆளுங் கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் அடைத்து வைத்திருந்த போது, அவர்களை சரிக்கட்டுவதற்கு நடத்திய பேரத்தில், தற்போது பெரிய பிரச்னை வெடித்துள்ளது. பொதுப் பணித் துறை கான்ட்ராக்ட்களை எடுப்பதில், அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர் கள் மத்தியில், குடுமிப்பிடி சண்டை நடந்து வருகிறது.

சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படும் திருநாவுக்கரசருக்கு, காங்கிரசில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர் எப்போது மாற்றப்படு வார் என, காங்கிரசார் எதிர்பார்த்து காத்திருக் கின்றனர். உள்ளாட்சி தேர்தலில், காங்., கூட்டணி அவசியமில்லை. லோக்சபா, சட்ட சபை தேர்தலில் தான், அக்கட்சி கூட்டணி முக் கியம். ஆனால், தென் மாவட்டங்களில், அக் கட்சி உதவி தேவைப்படுவதால், கூட்டணியை முறிக்க வேண்டாம்.
  தினமலர்

கருத்துகள் இல்லை: