செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

திமுக மீது ஏன் சேறு வாரி வீசுகிறார்கள்? தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், பண்பாட்டின் எழுச்சிக்கும் காரணமான ஒரு இயக்கம்

அழகப்பண்ணே, சமூக இணைய தளங்களில் தேர்தல் காலத்தில் எல்லாம் பார்ப்பனீய லாபியால் தவறாமல் உலவ விடப்படும் தலைவர் கலைஞரின் சொத்து மதிப்புப் பட்டியலைக் காட்டியபடி வந்து பக்கத்தில் அமர்ந்தார்.
பாருங்க கருணாநிதி எவ்வளவு ஆயிரம் கோடி சொத்து சேத்திருக்கார்!!!
நானும் வாங்கிப் பார்த்தேன், ஐ.டி ல இருக்குற நம்ம பார்ப்பனத் தம்பிகளும், பெரிசுகளும் இன்னமும் கலைஞர் மேல் எவ்வளவு கான்டாக இருக்கிறார்கள் என்று அதைப் பார்த்ததும் புரிந்தது, இந்த ஆள ஒழிச்சாத்தான் தமிழ்நாட்டுல நம்ம இழந்த பெருமையா மீட்க முடியும், மறுபடியும் சாமி சாமின்னு நம்ம காலைக் கழுவி தீத்தம்னு இந்த சூத்திரப் பயலுகளா குடிக்க வைக்க முடியும்னு நல்லாத் தெரிஞ்சு வச்சிருக்கானுங்க.
கொஞ்சம் தீவிரமா நடுப்பகுதிக் கணக்குகளைப் படித்துப் பார்த்தேன்,
கலைஞரின் அக்கா மகனின் பேரனின் காதலியின் தாய் மாமாவுக்கு திருநெல்வேலிக்கு அருகே புத்தளம் கடற்கரைத் தோட்டம் - மதிப்பு - 10 லட்சம்
கலைஞரின் ஒன்று விட்ட சித்தப்பாவின் தம்பி மகனுக்கு காது குத்திய செலவு - மதிப்பு - 2 லட்சம்
கலைஞரின் திருவாரூர் வீட்டின் பரண் மீது தூசி படிந்து கிடக்கும் விறகு மற்றும் அதை வெட்ட ஆன செலவு - மதிப்பு - 1.5 கோடி
கலைஞர் 1924 இல் இருந்து இன்று வரை முடிவெட்டிக் கொள்ள ஆகிய செலவு - 5 லட்சம்

கலைஞர் சென்னைக்கு வந்த பிறகு காலையில் சாப்பிட்ட செலவு - - 10 லட்சம்
கலைஞர் கோட்டைக்குப் போக பெட்ரோல் போட்ட செலவு - 20 லட்சம்
ஆக மொத்தம் 1,76,000 கோடி தொண்ணூறு பைசா என்று மிகத் துல்லியமாக ஒரு "சார்ட்டட் அக்கௌன்டன்ட்" சான்றிதழ் அளிக்காத குறையாக கொண்டையை மறைக்க முடியாமல் இருந்தது அந்தக் கணக்கு.
"அண்ணே, உங்க சொத்து மதிப்பு எவ்வளவு?"
"என்ன தம்பி வங்கிக் கணக்குல ஒரு 3 லட்சம் இருக்கு, இந்த வீடு ஒரு 30 லட்சம் பெரும், அது போக ஊர்ல புஞ்சை நஞ்சைனு ஒரு 10 லட்சம், எல்லாம் சேத்தா ஒரு 50 லட்சம் தேறும்."
"அண்ணே, என்ன வேலை பாக்குறீக, பொதுப்பணித் துறைல ரிட்டயர்ட் கிளெர்க் தம்பி!!!"
"அண்ணே, உங்க தம்பிக்கு ஒரு கோடிகிட்ட சொத்து இருக்குன்னு சொல்றாங்க?"
"அது அவஞ் சம்பாரிச்சு சேத்தது, கல்யாணம் புள்ள குட்டின்னு ஆனப்பறம் எல்லாரும் ஒன்னாக முடியுமா?"
"அண்ணே, உங்க மகனுக்கு அமெரிக்காவுல வீடெல்லாம் இருக்காமே?"
"அவன் சாப்ட்வேர் கம்பெனில வேலை பாக்குறான், மாசம் 15 லட்சம் சம்பளம் வாங்குறான், அதுக்கும் நமக்கும் என்ன தம்பி சம்மந்தம்?"
"அண்ணே, உங்க தங்கச்சி குடும்பம் தான் மாவட்டத்துலேயே பெரிய பணக்காரக் குடும்பம்னு சொல்றாங்க?"
"ஏம்பா, கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டா அது வேறே குடும்பம், நாம வேற குடும்பம்பா?"
"அப்புறம் என்ன "கூந்தலுக்கு" கலைஞரின் சொத்து மதிப்புன்னு வரும்போது மட்டும் ஊர்ல இருக்குற எல்லாரையும் இழுத்துட்டு வரீங்க?"
"உங்களுக்கு ஒரு நியாயம், கலைஞருக்கு ஒரு நியாயமா அண்ணே?"
கலைஞரின் உண்மையான சொத்து மதிப்பையும், அதற்கு அவர் வருமான வரிக் கட்டி வைத்திருக்கும் ரசீதையும் அழகப்ப அண்ணனுக்குக் காட்டினேன்.
அழகப்பண்ணே ஆச்சிக்கி சுகர் மாத்திரை காலி இருச்சு, மெடிக்கல் போகணும்னு மெதுவா நழுவினார்.
துவங்கிய காலத்தில் இருந்து இன்று வரை தி.மு.க வின் தலைவர்களில் இருந்து தொண்டர்கள் வரை அதிகமாக ஆற்றலை வீணடித்தது அவதூறுகளை எதிர்கொள்வதில் தான். ஒரு கட்சியும் அதன் தலைவரும் ஒரே இயக்கத்தை ஆதரித்தார் மற்றும் ஆதரிக்கவில்லை என்று இரண்டு முரண்பட்ட காரணங்களுக்காக ஆட்சியை இழந்தது உலக வரலாற்றிலேயே தி.மு.க வாகத்தான் இருக்க முடியும், உண்மையில் திமுகவின் உண்மையான எதிரி அ.தி.மு.க வோ, வேறு எந்த அரசியல் கட்சிகளோ அல்ல. ஏனெனில் அவர்களுக்கு நன்றாகவே தெரியும் கொஞ்சம் ஆழமாகப் போய் விவாதித்தால் நாம் மாட்டிக் கொள்வோம் என்று.....
தி.மு.க வின் மீதும், கலைஞரின் மீதும் இப்படிப்பட்ட ஓட்டை நாலணாக் குற்றச்சாட்டுகளைத் தூக்கிக் கொண்டு வரும் உண்மையான எதிரிகள் மூன்று தரப்பில் இருந்து வருவார்கள்:-
1) நேரடி எதிரிகளான பார்ப்பனர்கள்.
2) திமுகவில் இருந்து அரசியல் படித்துப் பின்பு வெளியேற்றப் பட்டவர்கள் அல்லது வெளியேறியவர்கள்.
3) தமிழ் தேசியத்தின் பெயரில் ஈழ வேப்பிலையால் மந்திரிக்கப்பட்ட விசிலடிச்சான் குஞ்சுகள்.
முதல் எதிரியை எதிர்கொள்ள மூளையை மட்டும் பயன்படுத்தவேண்டும்.
இரண்டாம் எதிரியை எதிர்கொள்ள அவர்களின் பழைய கால வரலாற்றைப் பயன்படுத்த வேண்டும்.
மூன்றாம் எதிரியை எதிர் கொள்ள பக்கத்தில் கிடக்கிற நல்ல சரளைக் கல்லையோ, மூங்கில் குச்சியையோ கூடப் பயன்படுத்தலாம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டின் எழுச்சிக்கும் காரணமான ஒரு இயக்கம் இப்படி அவதூறுகளை எதிர்கொண்டு அஞ்சிக் கிடக்க வேண்டுமா? அளப்பரிய சாதனைகளை, எட்ட இயலாத வளர்ச்சிப் படிநிலைகளைக் கண்டடைய நம்மை வழி நடத்திய தலைவர் கலைஞரின் மீதான அவதூறுகளைக் கண்டு அஞ்சி நடுங்கும் கோழைகளா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்?
பகிருங்கள்..
-- By Palani Rajalingam  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: