வெள்ளி, 3 மார்ச், 2017

அதிமுக எம்பிகளில் மூன்று அணி தம்பிதுரையின் பதவி காலி?

பிரதமர் மோடியுடனான பத்து நிமிட சந்திப்புக்கு இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்று திரும்பியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.இந்த பயணத்தில் அவர் சாதித்தது என்ன என விசாரித்தால் உதட்டைப் பிதுக்குகின்றனர்,உயர் அதிகாரிகள்.
மாநில முதலமைச்சர்கள் பிரதமரைச் சந்திக்க டெல்லி செல்லும்போது,பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுண்டு.அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தால் மட்டுமே பிரதமரைச் சந்திக்கும் நாளுக்கு முன்னதாகவே டெல்லிக்குப் பயணமாவார்கள்.
இல்லையெனில் சந்திப்பு நடக்கும் நேரத்திற்கு 4 மணிநேரம் முன்பாக டெல்லிக்குச் செல்வதுதான் வழக்கம். ஆனால் எந்த நிகழ்ச்சியும் இல்லாதநிலையில், 27மாலை சந்திப்புக்கு 26-ம் தேதி இரவே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்குச் சென்றுவிட்டார்.

அமைச்சர்கள் சி.வி.சண்முகம், உடுமலை ராதாகிருஷ்ணன், வேலுமணியும் வந்திருந்தனர். தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலர் சண்முகம் மற்றும் முதலமைச்சரின் செயலாளர்கள் சிவ்தாஸ்மீனா, விஜயக்குமார் ஆகிய அதிகாரிகளோ,27-ம் தேதி காலையில்தான் டெல்லிக்குச் சென்றனர்.

 இது பற்றி டெல்லியிலுள்ள ஓ.பன்னீர் அணி எம்.பி.கள் நம்மிடம், "மக்களவை மற்றும் மாநிலங்களவை அ.தி.மு.க.வுக்கு மொத்தம் 50 எம்.பி.கள். இதில் 12 பேர் பன்னீர்செல்வம் அணியில் இருக்கிறோம். மீதம் 38 பேர் எடப்பாடி டீமில் -அதாவது சசிகலா டீமில் இருப்பதாகக் கணக்கு.

ஆனா,தம்பிதுரையால் 19 பேரை மட்டுமே விமானநிலையத்துக்கு அழைத்துப்போக முடிந்தது. மீதி 19 பேரை வைத்தியலிங்கம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
இப்படி எம்.பி.கள் மூன்று அணிகளாகப் பிரிந்துநிற்பதைப் பயன்படுத்தி மக்களவைத் துணைத்தலைவர் பதவியை தம்பிதுரையிடமிருந்து- அதாவது அ.தி.மு.க.விடமிருந்து பறிக்க மத்திய அரசிடம் ஒரு யோசனை இருக்கிறது” என்றனர்.

கருத்துகள் இல்லை: