செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

சசிகலா சிறை வசதிக்கு காவிரி உரிமை பேரம் பேசப்பட்டது???

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை என தீர்ப்பு விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார். சிறையில் சசிகலாவுக்கு விஐபி சலுகைகள் வேண்டும் என்று கேட்டதாகவும், அதற்கு கர்நாடக அரசு எந்த சலுகைகளும் வழங்க முடியாது என்று மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், அதிமுகவில் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும், சசிகலாவின் அக்கா மகன் தினகரன், சிறையில் சசிகலாவிற்கு பல்வேறு வசதிகள் செய்துதர முயற்சி செய்ததாக தெரிகிறது. இந்நிலையில் சசிகலாவிற்கு எந்த சலுகையும் கிடையாது என்று சொன்ன கர்நாடகா அரசு, தற்போது சசிகலாவிடம் பேரம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், சிறையில் சசிகலாவுக்கு எல்லா வசதிகளும் செய்து தருகிறோம். ஆனால் காவேரி ஆற்றின் குறுக்கே நாங்கள் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்று கர்நாடக அரசு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கர்நாடக அரசின் இந்த ஒப்பந்தத்திற்கு சசிகலாவும் சம்மதித்துவிட்டதாக தெரிகிறது. இதனால் காவேரி பிரச்சனையில் எடப்பாடி தலைமையிலான அரசு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காது என்றும் கூறப்படுகிறது. சசி ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் சின்னம்மா நல்லா இருந்தா போதும், தமிம்நாடு எப்படி போனா என்ன என்கிற எண்ணத்தில் தமிழகத்தை காவு கொடுக்க தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லைவ்டே

கருத்துகள் இல்லை: