புதன், 15 பிப்ரவரி, 2017

வினவு :அதிமுக கும்பலை சேர்ந்த அமைச்சர், அதிகாரிகள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவேண்டும்

அதிமுக என்ற கிரிமினல் மாஃபியாவை அரசியலிலிருந்தே ஒழித்துக் கட்ட வேண்டும். அந்தக் கும்பலைச் சேர்ந்த அனைவரின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அம்மா என்றழைக்கப் படும் கிரிமினலின் படங்களும் பெயர்களும் தமிழகத்தின் முகத்திலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும்.
வழக்கு போட்டு நீதிபெறும் வழி முறையை, ஜல்லிக்கட்டு போராட்டத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.
மோடி சட்டத்தை திருத்தினால்தான் ஜல்லிக்கட்டு நடத்த முடியும், மாநில அரசு எதுவும் செய்ய முடியாது என்றார்கள். பிறகு பன்னீர் கேட்டதற்கு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நான் திருத்த முடியாது, நீங்கள் மாநிலத்தில் சட்டம் கொண்டு வந்தால் அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வாங்கித்தருகிறோம் என்றார் மோடி. இதற்கிடையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிடக் கூடாது என்பதால், தீர்ப்பு சொல்லாதே என்றார்கள். உச்ச நீதிமன்றமும் தீர்ப்பை நிறுத்தி வைத்தது. அப்புறம் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. அதற்கு விலங்கு நல வாரியம் உள்ளிட்டோர் இடைக்கால தடை வாங்காமல் கவனித்துக் கொண்டார்கள்.
இத்தனையும் எப்படி நடந்தது. ஏன் நடந்தது? மெரினா போராட்டம் தொடங்கும் வரையில் எதுவுமே முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள், போராட்டத்தின் தீவிரத்தை கண்டார்கள். “நீ சட்டம் போடுவியோ, தீர்ப்பு எழுதுவியோ அது உன் வேலை. ஜல்லிக் கட்டு நடக்கும் என்று உறுதியாகும் வரை நாங்கள் விடுவதில்லை” என்று மக்கள் நின்றார்கள். சட்டத்தை மக்கள் மதிக்கவில்லை. தடையை மீறி நடத்தினார்கள்.

இனிமேல் இதனை அங்கீகரிக்காவிட்டால், சட்டத்துக்கு கட்டுப்பட மாட்டார்கள் என்பது மத்திய மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல, நீதிமன்றத்துக்கும் புரிந்து விட்டது.
அதனால்தான் ஏதாவது ஒரு வழியில் இதனை சட்டரீதியாக தீர்த்து வைக்கவில்லை என்றால், மக்கள் படிப்படியாக அரசாங்கத்தின் அதிகாரத்தையே எல்லா விவகாரங்களிலும் கேள்விக்குள்ளாக்க ஆரம்பித்து விடுவார்கள் என்ற அச்சம் ஆளும் வர்க்கத்துக்கு வந்தது.
அதன் விளைவுதான் மாநில அரசின் சட்டம்.
அதாவது மக்களின் விருப்பத்துக்கு அரசும் நீதிமன்றமும் பணிந்தன.
அதே வழிமுறையை ஊழல் பெருச்சாளிகளுக்கு எதிராகவும் நாம் கையாள முடியும். கையாள வேண்டும்.
அதிமுக என்ற கிரிமினல் மாஃபியாவை அரசியலிலிருந்தே ஒழித்துக் கட்ட வேண்டும். அந்தக் கும்பலைச் சேர்ந்த அனைவரின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அம்மா என்றழைக்கப் படும் கிரிமினலின் படங்களும் பெயர்களும் தமிழகத்தின் முகத்திலிருந்து துடைத்தெறியப்படவேண்டும்.
இதை நோக்கி நமது கோரிக்கைகளை அமைத்துக் கொள்வோம். போராடுவோம்.

கருத்துகள் இல்லை: