ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

சசிகலா பேச்சு : எம்.எல்.ஏ.க்கள் அதிர்ச்சி! தற்கொலை மிரட்டல் ?

அம்மா கொண்டு வந்த இந்த ஆட்சி தொடராவிட்டால் நான் எடுக்கும் முடிவு எல்லோரையும் வருத்தப்பட வைக்கும்

கூவத்தூரில் நேற்று சசிகலா எம்.எல்.ஏ.க்களிடம் பேசிய விபரங்கள் தற்போது வெளிவந்து கொண்டு இருக்கின்றன. ஒரு எம்.எல்.ஏ.க்களுக்கு ஐந்து பாதுகாவலர்கள் உள்ளனர். சசிகலாவுடன் திவாகரும் அங்கிருந்தார். பிறகு, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த எம்.நடராஜனும் டிஸ்சார்க் ஆகி நேராக எம்.எல்.ஏ.க்களை சந்திக்க வந்துவிட்டார். சீட்டாடி கொண்டு ஜாலியாகப் பொழுதை கழித்துக் கொண்டு இருந்த எம்.எல்.ஏ.க்களிடம் சசிகலா நேராக வருகிறார் என்ற தகவலை அமைச்சர்கள் சொன்ன உடன் அனைவரும் பரபரப்பாகி விட்டனர். எதற்கு வருகிறார் சின்னமா எங்கள் மீது நம்பிக்கையில்லையா என சில எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களிடம் கேட்ட போது. சின்னமா ரகசியமாக வரவில்லை. வெளிப்படையாக பத்திரிகையாளர்களிடம் சொல்லிவிட்டு தான் வருகிறார். உங்கள் மனதில் உள்ளதை எல்லாம் அவரிடம் நேரில் சொல்லுங்கள். உங்கள் கருத்தை அறிய தான் வருகிறார். தயவுசெய்து எல்லோரும் வெளிப்படையாக பேசுங்கள் என்று அமைச்சர்கள் கூறியிருக்கிறார்கள்.

சசிகலா, வந்தவுடன் பெண் எம்.எல்.ஏ.க்களிடம் சென்று அவர்கள் நலனை விசாரித்தார். பிறகு தனி அறையில் போய் அமர்ந்துகொண்டார். எம்.எல்.ஏ.க்களை தனித்தனியாக வரவழைத்துப் பேசினார். எல்லோரிடமும் சசிகலா பேசிய பேச்சின் சாரம்சம் வருமாறு, அமமா என்னை நம்பி கட்சியை விட்டுச் சென்றிருக்கிறார். நீங்கள் தான் இந்தப் பொறுப்பை எனக்கு அளித்தீர்கள். கட்சியை காப்பாற்ற வேண்டும். பன்னீர் செய்த துரோகம் அம்மாவிற்கு செய்த துரோகம். திமுகவுடன் ரகசிய கூட்டு வைத்திருக்கிறார் பன்னீர். அம்மா கொண்டு வந்த இந்த ஆட்சியை கலைத்து தேர்தலை கொண்டுவர வேண்டும் என்ற முடிவோடுதான் ஸ்டாலின் பேச்சைக்கேட்டு பன்னீர் நாடகமாடி கொண்டு இருக்கிறார். மத்திய அரசும், அம்மா கொண்டு வந்த இந்த ஆட்சியை தொடரவிடாமல் கவிழ்க்க சதி செய்கிறது. நீங்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருந்தால் நிச்சயம் அமமா ஆட்சி தொடரும். உங்களுக்கு வேண்டிய அனைத்தும் கிடைக்கும். என்னை நம்புங்கள். அம்மா கொண்டு வந்த இந்த ஆட்சி தொடராவிட்டால் நான் எடுக்கும் முடிவு எல்லோரையும் வருத்தப்பட வைக்கும் என்று இந்த இடத்தில கண்கலங்கி விட்டு தயவு செய்து ஒற்றுமையோடு அம்மா ஆட்சித் தொடர என்னோடு இருங்கள் என்று பேசி இருக்கிறார். சசிகலா கண்கலங்கி பேசிய பேச்சுக்கு என்ன அர்த்தம் என்பதுதான் தற்போது எம்.எல்.ஏ.க்களிடம் விவாத பொருளாக இருக்கிறது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: